இளம்பெண்ணை கர்ப்பமாக்கி தலைமறைவான காதலன் மீது காவல் நிலையத்தில் புகார்
திருவள்ளூர் அருகே இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி கர்ப்பமாக்கி தலைமறைவான காதலனை சேர்த்து வைக்கக்கோரி மகளிர் காவல் நிலையத்தில் புகார்.;
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த கொண்டஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் எட்வின் (27). இவர் தனியார் தொழிற்ச்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் அதே பகுதியை சேர்ந்த ஏஞ்சல் குளோரி (19) என்ற பெண்ணை கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்கள் பல இடங்களில் சுற்றித் திரிந்து தனிமையில் இருந்துள்ளனர். இதனால் ஏஞ்சல் குளோரி கர்ப்பமாகியதாக்க கூறப்படுகிறது. இதனை அடுத்து தான் கர்ப்பமாகி உள்ள விவகாரத்தை காதலன் எட்வினிடம் கூறி திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளார். ஆனால் காதலன் வீட்டில் திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளதால் காதலன் தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில் ஏஞ்சல் குளோரி தன் பெற்றோர்களுடன் திருவள்ளூர் மகளிர் காவல் நிலையத்தில் தலைமறைவாகி உள்ள காதலனை சேர்த்து வைக்கக்கோரி கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.