திருவள்ளூர் அருகே பூச்சி மருந்து குடித்து சிறுமி தற்கொலை

Suicide Case -திருவள்ளூர் அருகே பூச்சி மருந்து குடித்து சிறுமி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-07-06 02:47 GMT

Suicide Case - திருவள்ளூர் மாவட்டம் காட்டுக்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் சதீஷ்குமார். இவரது மகள் சோனிகா (வயது 12). இவர் சென்னை ராயபுரத்தில் உள்ள மெட்ரிக் தனியார் பள்ளியில் 7.வகுப்பு பயின்று வந்தார்.

இந்நிலையில் நேற்று  சோனிகாவை பெற்றோர் கண்டித்துள்ளார். இதில் மாணவி மன உளைச்சலுக்கு ஆளாகி.வீட்டில் கரப்பான் பூச்சி மருந்தை குடித்து மயங்கி கீழே விழுந்துள்ளார். பெற்றோர்கள் சோனிகாவை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், சோனிகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News