அதிமுக வேட்பாளருக்கு கிரேன் மூலம் ராட்சத மாலை
திருவள்ளூர் நகராட்சி என். ஜி.ஓ காலனியில் அதிமுக வேட்பாளர் ரமணாவுக்கு கிரேன் மூலம் ராட்சத மாலை அணிவித்து ஆரவார வரவேற்பு.;
திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட என்ஜிஓ காலனி பகுதியில் 110 கிலோ எடை கொண்ட ரோஜாப்பூ மாலையை கிரேன் மூலம் தூக்கி வேட்பாளருக்கு அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்.
திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பி. வி. ரமணா தொடர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி இன்று திருவள்ளூர் நகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது நகராட்சி 22வது வார்டு என்.ஜி.ஓ காலனி பகுதியில் அதிமுக நிர்வாகிகள் சார்பில் 110 கிலோ எடை கொண்ட ரோஜாப்பூ மாலையை தயார் செய்து அதனை கிரேன் மூலம் வேட்பாளர் பி.வி. ரமணாவுக்கு அணிவித்தும் மாடியிலிருந்து பூக்களைத் தூவியும் வரவேற்றனர். வரும் 5 ஆண்டுகாலம் உங்களுக்காக உழைக்க தயாராக இருப்பதாகவும் வேட்பாளர் பி.வி. ரமணா வாக்குறுதி அளித்தார். அதேபோல் அதிமுக கூட்டணி கட்சியான புரட்சி பாரதம் கட்சி சார்பில் வழக்கறிஞர் மாநில செயலாளர் அணி கே.எம். ஸ்ரீதர் பிரம்மாண்ட மாலை அணிவித்து உற்சாக வரவேற்றார்.