பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் குப்பை அள்ளும் துப்புரவு தொழிலாளர்கள்; இப்படியும் ஒரு அவலமா?
பெரியபாளையம் ஊராட்சியில் உள்ள துப்புரவு தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
பெரியபாளையம் ஊராட்சியில் துப்பரவு தொழிலாளர்கள் கையுறை கூட இல்லாமல் வெறும் கைகளால் குப்பைகள் அல்லும் அவலம் நீடிக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் ஊராட்சியில் சுமார் 12,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த ஊராட்சியில் புகழ்பெற்று பவானி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடி திருவிழாவானது தொடர்ந்து 14.வார காலம் வெகு விமர்சியாக நடைபெறும் பவானி அம்மன் தரிசனம் செய்ய சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா,தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் வெறும் நாட்களிலும் மற்றும் விழா நாட்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் பெரியபாளையம் வந்து தங்கி பவானி அம்மனுக்கு நேர்த்திக் கடனை செலுத்தி சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.
தற்போது ஆடி மாதம் பிறந்து 4.வாரம் திருவிழா விமர்சையாக நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் இந்தப் பெரியபாளையத்தில் உணவகங்கள்,மளிகை கடைகள், வீடுகளில் இருந்து வெளியேறும் குப்பை கழிவுகளை முறையாக பெரியபாளையம் ஊராட்சியில் குப்பை தொட்டிகளை அமைக்காததால் சாலை ஓரங்களில், கொட்டி செல்கின்றனர்.
இது மட்டுமல்லாமல் பெரியபாளையம் பவானி அம்மனை தரிசனம் செய்ய வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் அவர்கள் கொண்டுவரும் உணவு பொட்டிலங்கள் பிளாஸ்டிக் கவர்கள் உள்ளிட்டவை பயன்படுத்திவிட்டு அங்கங்கு வீசி விட்டு செல்லும் குப்பைகளையும் நாள்தோறும் காலை, மாலை என இரு வேலைகளிலும் சுமார் 20-க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் வைத்து சுத்தம் செய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.இந்து துப்பரவு பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு குப்பைகளை அகற்றுவதற்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததால் கையுறைகள் கூட இல்லாமல் வெறும் கைகளால் குப்பைகளை அல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் தற்போது மழை பெய்து வருவதால் சேற்றில் கிடைக்கும் குப்பைகளும் கூட வெறும் கைகளாலே அள்ளி அவற்றை அப்புறப்படுத்தி வருகின்றனர்.இந்த பெரியபாளையம் பவானி அம்மன் ஆடி திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரவும் இதுபோன்று பணிகளுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வாங்கவும் இலட்சக்கணக்கில் நிதி ஒதுக்குகிறது ஆனால் அந்த நிதி என்ன ஆனது என கேள்வியும் எழுந்துள்ளது.
மேலும் இது குறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் தெரிவிக்கையில், ஆடி திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இந்த திருவிழாவை முன்னிட்டு அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் எல்லாபுரம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது, அந்தக் கூட்டத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும், சாலைகளையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும், பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை தேவையான அடிப்படை வசதிகளை பெரியபாளையம் சுற்று வட்டார பகுதிகளிலும் அமைத்திட வேண்டும் ,கூடுதலாக துப்புரவு தொழிலாளர்களை வைத்து நாள்தோறும் சாலைகளிலும், கோவில் சுற்று வட்டார பகுதியில் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் அதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்து தர வேண்டும் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணியாற்றுவதாகவும், நம் வீட்டு முன்னால் இருக்கும் குப்பைகளை கை வைத்து அல்ல கூச்ச படும் நம் நம் வீசி செல்கின்ற குப்பைகளை சற்று கூட கூச்சப்படாமல் சுத்தம் செய்து வரும் தூய்மை பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.
கூட்டத்தில் உயர் அதிகாரிகள் தெரிவித்தும் அதனை சற்று கூட மதிக்காத ஊராட்சி நிர்வாகத்தின் மீது மாவட்ட ஆட்சியர் கண்டுகொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் துப்புரவு பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.