பெரிய பாளையம் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள்

பெரியபாளையம், கன்னிகைப்பேர் ஆகிய இரண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை கோவிந்தராஜன் எம்.எல்.ஏ. வழங்கினார்.;

Update: 2023-09-05 10:14 GMT

பெரிய பாளையம் அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.

பெரியபாளையம், கன்னிகைப்பேர் ஆகிய அரசுப் பள்ளிகளில் பயிலும் 181 மாணவ மாணவிகளுக்கு அரசின் விலை இல்லா மிதிவண்டிகளை கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ டி.ஜே.கோவிந்தராஜன் வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் , பெரியபாளையம் மற்றும் கன்னிகைப்பேர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ - மாணவிகளுக்கு மிதி வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பள்ளியின் தலைமையாசிரியர்கள் சம்பத், பேரின்ப செல்வி தலைமை தாங்கினர்.

பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஏழுமலை வரவேற்றார். தலைமை செயற்குழு உறுப்பினர் பி.ஜெ.மூர்த்தி , ஒன்றிய செயலாளர் ஆ. சத்தியவேலு, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய அவைத்தலைவர் ரவிச்சந்திரன்,வக்கீல்கள் சீனிவாசன், முனுசாமி , ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிபூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்து கொண்டு பெரியபாளையம், கன்னிகைப்பேர் அரசு மேல்நிலை பள்ளிகளை சேர்ந்த 181 மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார் .

நிகழ்ச்சியில் மாவட்ட , ஒன்றிய நிர்வாகிகள் ரமேஷ் , ராமமூர்த்தி, வி.பி.ரவிக்குமார், ரவிச்சந்திரன், தனசேகர், ஏனம்பாக்கம் சம்பத், ராஜா,அப்புன்,சுமன், குணசேகரன்,சம்பத், அசோக், தமிழரசன், பெரியசாமி, பன்னீர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News