திருவள்ளூர் வாரிய குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாக ரூ.15லட்சம் மோசடி

திருவள்ளூர் மணவாள நகர் பகுதியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாக கூறி ரூ. 15லட்சம் மோசடி செய்தவர் கைது.

Update: 2021-08-03 16:54 GMT

திருவள்ளூர் அகரம் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (53) இவர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலமாக வீடு வாங்குவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்ததாக தெரிகிறது.

இதை அறிந்த திருவள்ளூரை அடுத்த மணவாள நகர் பகுதியைச் சேர்ந்த பவுல்ராஜ் (54) என்பவர் தனது மனைவி ஞான ரோஸ்லின் என்பவருடன் கண்ணனை நாடி தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் தனது உறவினர்கள் பெரிய பதவில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்கள் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் வீடு வாங்கி தருவதாக கூறி சுமார் ரூ. 2,50,000 பணத்தை கண்ணனிடம் பெற்று பெற்றுக் கொண்டதாக தெரிகிறது.

இதையடுத்த பணத்தை பெற்றுக்கொண்ட பவுல்ராஜ் தனது மனைவியுடன் சென்று தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வழங்கியதைப் போல போலியான குடியிருப்பு அனுமதி சீட்டு மற்றும் மாற்று இடம் வழங்கிட அடையாளச் சீட்டு ஆகியவற்றை தயார் செய்து கண்ணனிடம் கொடுத்துள்ளனர்.

அதைப் பெற்றுக் கொண்ட கண்ணன் விசாரித்தபோது அது போலியான அனுமதிச்சீட்டு என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இதேபோல கண்ணன் கணவன் மனைவி ஆகிய இருவரும் கூட்டு சேர்ந்து மேலும் 5 பேரிடம் வீட்டுவசதி வாரியத்தில் வீடு வாங்கித் தருவதாக கூறி ரூ. 12,50,000 என மொத்தம் ரூபாய் 15 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் திருவள்ளூரில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர்.

இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டண்ட் வருண் குமார் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை சூப்பிரண்டு அசோகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்தநிலையில் திருவள்ளூர அருகே பதுங்கியிருந்த பவுல்ராஜ் நேற்று போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் தலைமறைவான உள்ள அவரது மனைவி ஞான ரோஸ்லினை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News