திருவள்ளூரில் கவுன்சிலர் மகனை வெட்டிய 4 பேர் கைது
திருவள்ளூர் நகர மன்ற 16.வது வார்டு உறுப்பினரின் மகனை கொலை செய்ய முயன்ற நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகர மன்ற 16.வது வார்டு உறுப்பினராக பதவி வகித்து வருபவர் இந்திரா பரசுராமன், இவரது மகன் கலைவாணன்(30). திருவள்ளூரில் திருமணம் மஞ்சள் நீராட்டு விழா கோவில் நிகழ்ச்சி உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு பந்தல், சேர், டெக்கரேஷன் உள்ளிட்ட பொருட்கள் வாடகைக்கு விடும் சாமியான் பந்தல் கடை மற்றும் மருந்து கடை நடத்தி வருகிறார்.
கலைவாணன் உறவினரான சரவணன் கலைவாணன் கடையில் பணியாற்றி வந்தார், இந்த நிலையில் சரவணனுக்கும் , ஆகாஷ் கஞ்சா போதை பொருள் விற்பனை செய்து வருவதாக கூறப்படும் ஆகாஷ் என்பவருக்கும் தொடர்பு இருந்திருக்கிறது. சரவணன் கலைவாணன் கடையில் பணி செய்து வருவதால் ஆகாஷ் அடிக்கடி கடைக்கு வந்து செல்வதையும் தெரிந்து கொண்ட கலைவாணன் சரவணனை கண்டித்துள்ளார்.
தொடர்ந்து சரவணன் சந்தித்து வந்த ஆகாஷை கலைவாணன் இனிமேல் தன் கடைக்கு வரக்கூடாது, சரவணனை சந்திக்கக் கூடாது என்று எச்சரித்து காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார்.
கடந்த 4ம் தேதி அன்று தன் மருந்து கடையில் இருந்த கலைவாணனை தீர்த்து கட்ட வேண்டும் என்று முடிவு செய்த ஆகாஷ் மற்றும் அவர் கூட்டாளிகள் மருந்து கடைக்கு வந்து உள்ளே நுழைந்து கலைவாணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டி அங்கிருந்து தப்பி சென்றார்.
இதில் பலத்த காயம் அடைந்து ரத்த வள்ளத்தில் மறைந்து கீழே விழுந்த கலைவாணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராமச்சந்திரா தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்
இது குறித்து காவல்துறையினர்வழக்கு பதிவு செய்து கலைவாணன் மருந்து கடையில் இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடி வந்த நிலையில். திருவள்ளூர் காந்திபுரம் பகுதியை சேர்ந்த ஆகாஷ்(21), சந்தோஷ்(22), சந்திரசேகர்(35) மற்றும் 18 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்து திருவள்ளூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
ஆகாஷ், சந்தோஷ், சந்திரசேகர், ஆகிய மூன்று பேரும் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 18 வயது சிறுவன் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.