ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

Former CM Jayalalitha Birth Day எல்லாபுரம் தெற்கு வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.;

Update: 2024-02-24 07:30 GMT
ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

முன்னாள் முதல்வர்  ஜெ..பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

  • whatsapp icon

Former CM Jayalalitha Birth Day

வட மதுரையில் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76. ஆவது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் கட்சியினர் விமர்சையாக கொண்டாடுவதோடு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளும், அன்னதானங்களும் உள்ளிட்டவை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் பெரியபாளையம் அருகே வடமதுரை அரசு தொடக்கப்பள்ளி அருகே வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்திற்கு ஒன்றிய செயலாளர் எம். மகேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி இனிப்பு வழங்கி 500 பேருக்கு பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Former CM Jayalalitha Birth Day


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி  பொதுமக்களுக்கஅன்னதானம் வழங்கப்பட்டது. 

இதில் எல்லாபுரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் வடமதுரை கே.ரமேஷ் கலந்து கொண்டு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செய்தார் இதில் நிர்வாகிகள் ராஜசேகர், ராஜீவ் காந்தி, ராஜா, சீனிவாசன், ராமதாஸ், தமிழ் மன்னன், ராஜீவ் காந்தி ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.இதேபோல் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் பெரியபாளையம் பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்ட ஜெயலலிதா படத்திற்கு முன்னாள் கும்முடிபூண்டி சட்டமன்ற உறுப்பினர் கே. எஸ்.விஜயகுமார் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து பின்னர் ஏழை,எளிய மக்களுக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் ஒன்றிய துணைச் செயலாளர் கோதண்டன், வித்யா லட்சுமி இணைச் செயலாளர் வித்யாலட்சுமி வேதகிரி, ஒன்றிய அவைத் தலைவர் விஜயன், சுந்தர்ராஜன்,பார்த்திபன், ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News