ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் வளர்மதி பங்கேற்பு
Former CM Birthday Meeting பாடியநல்லூரில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் விழாவில் முன்னாள் அமைச்சர் வளர்மதி பங்கேற்று பேசினார்.;
முன்னாள் முதல்வர் ஜெ..யின் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி.
Former CM Birthday Meeting
திமுகவிற்கு ஓட்டு போட்டால் தைரியமாக சாலையில் நடமாட முடியாது. தமிழ்நாட்டில் பெட்டி கடை, பேப்பர் கடை, பள்ளி, கல்லூரி வாசல் என சகல இடங்களிலும் கஞ்சா புழக்கம், குற்றச்செயல்கள் அதிகரிக்க கஞ்சாவே காரணம் எனவும் புகார். முன்னாள் அமைச்சர் வளர்மதி கூட்டத்தில் பேசினார். .
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பாடியநல்லூரில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில மகளிர் மணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வளர்மதி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர் ஜெயலலிதா ஆட்சியில் பெண்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டிருந்தார் எனவும், ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களை பற்றியே சிந்தித்தார் எனவும், தொட்டில் குழந்தை திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம், லேப்டாப், சைக்கிள், ஸ்கூட்டி என பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டதாகவும், தற்போது அனைத்து திட்டங்களும் நிறுத்தப்பட்டு விட்டதாக சாடினார்.
வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை தவிர யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள் எனவும், திமுகவிற்கு மீண்டும் வாக்களித்தால் பொதுமக்கள் சாலையில் தைரியமாக நடமாட முடியாது என குற்றம் சாட்டினார். எங்கு பார்த்தாலும் பட்டப்பகலில் கொலை, கொள்ளை நடந்து வருவதாகவும், பெண்கள் வேலைக்கு சென்றாலும், குழந்தை பள்ளிக்கு சென்றாலும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு காத்திருக்க வேண்டி உள்ளதாக கூறினார்.
எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு மேடையில் 1000ரூபாய் எங்கே என தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்ததால், அண்மையில் 1000ரூபாய் வழங்கப்பட்டதாக கூறினார். மகளிர் உரிமை தொகை தொடர்பாக தமது சைக்கிளை கண்டுபிடித்து தருமாறு பெண் ஒருவர் புகார் கொடுத்ததாகவும், சைக்கிள் இல்லாதவருக்கு சைக்கிள் இருப்பதாக கூறி ரத்து செய்ததாக கூறினார். 1000ரூபாய் கொடுப்பதற்கு 1008தகுதி பார்ப்பதாக குற்றம் சாட்டினார்.
இரண்டு இடங்களை தவிர்த்து மற்ற அனைத்து இடங்களிலும் கருணாநிதி பெயரை வைத்து விட்டதாகவும், அந்த இரண்டு இடங்களுக்கும் பெயர் வைக்க வேண்டியது தானே என கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டில் பெட்டி கடை, பேப்பர் கடை, கல்லூரி வாசல், பள்ளி வாசல் என சகல இடங்களிலும் கஞ்சா கிடைக்கிறது எனவும், கொலை செய்தவனிடம் விசாரித்தால் கஞ்சா போதையில் கொலை செய்ததாக கூறுகிறான் எனவும், குற்றச்செயல்கள் அதிகரிக்க கஞ்சாவே காரணம் என சாடினார்.
டிஜிபி கஞ்சா நடமாட்டம் இல்லை என ஒருபுறம் கூறினாலும், எப்படி டன் கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டது எனவும், கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டவர் திமுக மாநில நிர்வாகி எனவும், 11ஆண்டுகளுக்கு முன்பே கைது செய்யப்பட்ட நபர் வெளியே வந்த பிறகு காவல்துறை ஏன் தொடர்ந்து கண்காணிக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.
ஜாபர் சாதிக் தலைமையில் உலக நாடுகளுக்கு கஞ்சா கடத்தல் நடைபெற்று வந்ததாக கூறினார். ஸ்டாலின் ஆட்சியில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளதாகவும், பெண்கள் மோசமான நிலைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாக கருணாநிதியின் மகள் கனிமொழியே கூறி இருப்பதாக பேசினார். திமுக அரசு வழங்கும் ௧௦௦௦ ரூபாய் நேராக மீண்டும் டாஸ்மாக் கடைக்கே சென்று விடுவதாகவும், சரக்கு 500ரூபாய் எனவும், சிக்கன் உள்ளிட்ட சைட் டிஷ் 500 ரூபாய் என செலவாகி விடுவதாக கூறினார். இளம் விதவைகள் அதிகமாக இருப்பதாக ஏற்கனவே கனிமொழி கூறி இருப்பதாக நினைவு கூர்ந்தார்.