திருவள்ளூரில் ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு
தரமற்ற நிலையில் சிக்கன் வைத்திருந்த 10 ஷவர்மா கடைகளுக்கு தலா ரூ.2000 ஆயிரம் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் தரமற்ற நிலையில் சிக்கன் வைத்திருந்த 10 ஷவர்மா கடைகள் மீது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தலா 2000 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கேரளாவில் ஷவர்மா உட்கொண்டதால் மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து தஞ்சையிலும் சவர்மா சாப்பிட்ட மூன்று பேர் மயக்கம் அடைந்ததால் தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஷவர்மா கடைகள் சிக்கன் கடைகளில் தரமற்ற முறையில் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர், பூந்தமல்லி, ஆவடி, மாதவரம், மணவாளநகர், திருவெற்றியூர் உள்ளிட்ட இடங்களில் ஷவர்மா கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஜெகதீஷ் சந்திரபோஸ் தலைமையில் அதிகாரி கடந்த 3 நாட்களாக 60க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு மேற்கொண்டு வந்ததில் தரமற்ற நிலையில் ஷவர்மா கடைகள் சிக்கன் வைத்திருந்ததை கண்டறிந்து
10 கடைகள் மீது தலா 2,000 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.தொடர்ந்து இதுபோன்று தரமற்ற நிலையில் செயல்படும் ஷவர்மா கடைகள் ஆய்வு மேற்கொண்டு அபராதம் விதிப்பது மட்டுமில்லாமல் சீல் வைக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.