மப்பேடு: கிணற்றில் தவறி விழுந்த மானை மீட்டு வனப்பகுதியில் விட்ட தீயணைப்பு துறையினர்
மப்பேடு பகுதியில் 40 அடி கிணற்றில் தவறி விழுந்த மான் மீட்பு; வனப்பகுதியில் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பாக விட்டனர்.;
மப்பேடு பகுதியில் 40 அடி விவசாயி கிணற்றில் தவறி விழுந்த மானை மீட்டு வனப்பகுதியில் தீயணைப்பு துறையினர் விட்டனர்.
திருவள்ளூர் அடுத்த மப்பேடு கிராமத்தில் 40 அடி விவசாய கிணற்றில் இன்று அதிகாலை 2 வயதுடைய ஆண் மான் ஒன்று தண்ணீர் குடிக்க கிணற்றில் இறங்கி முற்படும் போது தவறி விழுந்தது. அம்மான் நீண்ட நேரம் தண்ணீரில் நீச்சலடித்து வந்தது. அப்போது அந்த பகுதியில் விவசாயமும் செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவர் மான் கிணற்றில் விழுந்திருப்பதை கண்டு, காவல்துறையினருக்கு தகவல் அளித்ததுடன் தீயணைப்பு துறையினர் அந்தமானை உயிருடன் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட மானை வனத்துறையினர் பூண்டி காப்புக்காட்டில் பாதுகாப்பாக விட்டனர்.