பண மோசடி வழக்கு! பாஜக பொதுச்செயலாளருக்கு சிறை!

பண மோசடி வழக்கில் திருவள்ளூர் மாவட்ட பாஜக பொதுச் செயலாளருக்கு 6 மாதம் சிறை தண்டனை.;

Update: 2023-07-05 03:15 GMT

பண மோசடி வழக்கில் திருவள்ளூர் மாவட்ட பாஜக பொதுச் செயலாளருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் நாராயணமூர்த்தி என்பவரிடம் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி அன்று 7 லட்சம் பணத்தை கடனாக திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக பொது செயலாளர் கருணாகரன் பெற்றுள்ளார்.

பெற்ற பணத்தை நாராயணமூர்த்தி கருணாகரனிடம் கேட்டபோது ஒரு ஆண்டுகளாக நாட்களை கடத்தி வந்துள்ளார் 2020 ஆம் ஆண்டு நாராயண மூர்த்தி அவருக்கு தரவேண்டிய 7 லட்சம் பணத்தை இரண்டு லட்சம் இரண்டு லட்சம் மூன்று லட்சம் என தனித்தனியாக மூன்று காசோலைகளை தனது வங்கிக் கணக்கில் இருந்து கருணாகரன் நாராயண மூர்த்தியிடம் அளித்துள்ளார்.

ஆனால் கருணாகரன் வங்கிக் கணக்கில் பணம் இல்லாததை நாராயணமூர்த்தி அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் அவரிடம் பணமாக கேட்டபோதும் தராமல் நாட்களை கடத்தி வந்துள்ளார். இதனால் அதிர்ந்து அடைந்த நாராயணமூர்த்தி கருணாகரன் மீது திருவள்ளூர் விரைவு நீதிமன்றத்தில் பண மோசடி தொடர்பாக 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ந் தேதி அவர் மீது வழக்குத் தொடுத்திருந்தார்.

இந்த வழக்கின் முதல் கட்ட விசாரணை நீதிமன்றத்தில் 2020 மார்ச் 11ஆம் தேதி விசாரணைக்கு வந்திருந்தது. அதைத்தொடர்ந்து கடந்த ரெண்டரை ஆண்டுகளாக 90 முறை மேல் நீதிமன்றத்தில் வாய்தா பெற்றுள்ளார்.

இந்நிலையில் வழக்கில் இறுதி விசாரணை இன்று திருவள்ளூர் விரைவு நீதிமன்ற நடுவர் செல்வரசி விசாரணைக்கு முன் வந்தது நாராயண மூர்த்தியிடம் பணம் பெற்றது ஆதாரம் உறுதி ஆனதால் பண மோசடி வழக்கில் கருணாகரனுக்கு ஆறு மாத சிறை தண்டனையும் 30 நாட்களுக்குள் 7 லட்சம் பணத்தை மனுதாரருக்கு அளிக்க கோரி உத்தரவிட்டுள்ளார்.

அதேபோன்று திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் பாபு என்பவரிடம் கடந்த 2019 ஆம் ஆண்டு 3 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்று வழக்கில் கடந்த 2022 ஆண்டு நவம்பர் மாதம் அம்பத்தூர் நீதிமன்றம் 6 மாதம் சிறை தண்டனை விதித்து வழக்கில் அவர் மேல் முறையீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைக்க சென்னை வந்த பிரதமர் மோடி வரவேற்க வந்தபோது தனியார் தொலைக்காட்சி பெண் செய்தியாளரிடம் தவறாக நடந்த கொண்டவரும் பாஜக நிர்வாகி கருணாகரன் ஆவார்.

Tags:    

Similar News