கழிவுநீர் கலப்பால் பயிர் செய்ய முடியாமல் விவசாயி அவதி: ஆட்சியரிடம் மீண்டும் மனு

மெய்யூர் கிராமத்தில் விவசாயின் நிலத்தில் கழிவு நீர் கலப்பதை தடுத்து விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் விவசாயி மீண்டும் மனு அளித்துள்ளார்.

Update: 2024-10-15 02:00 GMT

படம்

திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட மெய்யூர் கிராமத்தில் வசித்து வருபவர் ராஜா. இவர் அதே பகுதியில் பூர்வீகமாக விவசாயம் செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அவருடைய நிலத்தில் மெய்வூர் ஊராட்சிக்குட்பட்ட மேட்டுக் காலனி, பள்ளக் காலனி, ஆகிய பகுதியில் இருந்து வரும் கழிவுநீரானது விவசாய நிலத்தில் விடப்படுவதால் அந்த நிலத்தில் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயி மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

இதுகுறித்து துறை சம்பந்தமான அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் விவசாயி குற்றம் சாட்டுகின்றனர்.

அதனை தொடர்ந்து கடந்த 26-06-2024- அன்று மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயி ராஜா கோரிக்கை மனு அளித்துள்ளார். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் இது சம்பந்தமான அதிகாரிகளை அழைத்து உடனடியாக விவசாயம் நிலத்திற்கு செல்லும் கழிவுநீரை தடுத்து நிறுத்தும் விதமாக 15-வது நிதிக்குழு மானியதிட்டத்தில் கீழ் நிதி தொகை ரூ.2,80,000/-மதிப்பீட்டில் செங்குத்து உறுஞ்ஜுகுழி பணி அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளார்.

ஆனால் இதுவரை கழிவு நீர் உறுஞ்ஜுகுழி பணி மேற்கொள்வதற்கான எந்த ஒரு நடவடிக்கைகளையும், வட்டார வளர்ச்சி நிர்வாகமும், ஊராட்சி மன்ற நிர்வாகமும் செய்ய முன்வரவில்லை என்று வேதனை தெரிவித்தார்.

இந்நிலையில் பதிக்கப்பட்ட விவசாயி மாவட்ட ஆட்சியரிடம் தனது வாழ்வாதாரமான விவசாயநிலத்தில் தற்போதாவது விவசாயம் செய்ய வழிவகுத்துக்கொடுக்கும்படியும், இது சம்பந்தமான அதிகாரிகளையும், ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர்களை அழைத்து உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுத்து விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் என  அந்த மனுவில் விவசாயி குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News