திருவள்ளூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூர் எம்.ஜி.ஆர் சிலை அருகே நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

Update: 2022-04-27 02:18 GMT

திருவள்ளூர் எம்.ஜி.ஆர் சிலை அருகே நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தச்சூர் முதல் சித்தூர் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலைகாக முப்போகம் விளையக்கூடிய விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்தும். விவசாயிகளை பாதுகாக்க மாற்று பாதையில் நெடுஞ்சாலையை கொண்டு செல்ல கோரியும் திருவள்ளூர் எம்.ஜி.ஆர் சிலை அருகே நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரை ஆறு வழி சாலை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது இந்த ஆறு வழிச்சாலை ஊத்துக்கோட்டை பள்ளிப்பட்டு உள்ளிட்ட தாலுகாக்களில் ஏராளமான விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும் .3 போகங்களும் விளையக்கூடிய விவசாய நிலங்களில்வழியே நெடுஞ்சாலையை எடுத்துச் செல்லும் ஆறு வழி நெடுஞ்சாலை பாதையை மாற்றி வேறு பாதையில் சாலைகள் அமைக்க விவசாயிகள் தரப்பில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக நேற்று திருவள்ளூர் எம்ஜிஆர் சிலை அருகே 150க்கும் மேற்பட்ட ஊத்துக்கோட்டை பள்ளிப்பட்டு தாலுகா களைச் சேர்ந்த விவசாயிகள் விவசாயிகளின் ஒப்புதல் இன்றி அளவீடு செய்யக்கூடாது எனவும். காவல்துறையினரை வைத்து விவசாயிகளை அச்சுறுத்தக் கூடாது. விவசாயிகளை நாகரிகமாக பேசும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும்.நூற்றுக்கணக்கான ஏக்கர் ஏரி நீர்நிலைகள் அழிக்கப்படும் திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்தவும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக 30க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News