விவசாயிகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

Farmers Candle light Tribute To Supkaransingh சுப்கரன்சிங் பலியான சம்பவத்துக்கு விவசாய சங்கத்தினர் பெரியபாளையத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.;

Update: 2024-02-25 05:45 GMT

Farmers Candle light Tribute To சகரன்சிங்


டில்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தை முறியடிக்க மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு  பயனளிக்கவில்லை. இந்நிலையில்  விவசாயிகளின் போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயி சுப்கரன் சிங் இறந்தார். அவருக்கு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில்விவசாயிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

விவசாயிகள் சங்கத்தின் சார்பாக 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தியபோது விவசாயி சுப்கரன்சிங் பலியானார்.எனவே,திருவள்ளூர் மாவட்ட தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கத்தின் சார்பாக எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதன் பின்னர், பலியான சுப்கரன்சிங் குடும்பத்துக்கு ஒரு கோடி இழப்பீடு தொகை வழங்க வேண்டும் விவசாயிகளின் மொத்த கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் சங்கத்தின் சார்பாக வலியுறுத்தினர். இந்நிகழ்ச்சியில்,மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் ஆர்.டி.விஜயபிரசாத், திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஜெ.ஆஞ்சநேயலு,மாவட்ட செயலாளர் வெங்கடாதிரி, மாவட்ட துணைத் தலைவர் ஞானபழனி,ஒன்றிய தலைவர் சுரேஷ்பாபு,கும்மிடிப்பூண்டி ஒன்றிய தலைவர் மோகனகிருஷ்ணா,ஒன்றிய பொருளாளர் கோவிந்தராஜ், மாவட்ட துணைச் செயலாளர் விஜயகுமார்,ஒன்றிய துணைத்தலைவர் தனுஷ், நிர்வாகிகள் சுதாகர்,திருமலை,தயாளன், ராஜா,பிரபு,கார்த்திகேயன், குப்பாநாயுடு,புவனக்குமார், ஏழுமலை,சரவணன், ஜெயமுருகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News