மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய பொறியாளர் கைது
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய 15000 ரூபாய் நோட்டுக்களை உதவி பொறியாளரிடம் வழங்கினார்;
செங்குன்றத்தில் புதிய மின் இணைப்பிற்காக 15ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் கைது. ரசாயனம் தடவிய பணத்தை வாங்கிய போது கையும் களவுமாக கைது செய்தது லஞ்ச ஒழிப்பு துறை.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த புள்ளிலைன் பகுதியை சேர்ந்தவர் பிரேம்சாகர் என்பவர் இவர் கட்டி வரும் புதிய வீட்டிற்கு மின் இணைப்பு பெறுவதற்காக செங்குன்றத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளர் கணேசனை அணுகியுள்ளார். அப்போது உதவி பொறியாளர் கணேசன் புதிய இணைப்பு வழங்க லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த பிரேம்சாகர் திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய 15000ரூபாய் நோட்டுக்களை உதவி பொறியாளரிடம் வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் உதவி பொறியாளர் கணேசனை கையும் களவுமாக கைது செய்தனர். மின் இணைப்பிற்காக லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.