எல்லாபுரம் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா
எம்ஜிஆரின்107- வது பிறந்த நாளை முன்னிட்டு எல்லாபுரம் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.;
எம்ஜிஆரின்107- வது பிறந்த நாளை முன்னிட்டு எல்லாபுரம் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் எம்ஜிஆர் சிலைக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
எல்லாபுரம் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் வடமதுரையில் எம்ஜிஆரின் 107-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
திருவள்ளூர் மத்திய மாவட்டம், எல்லாபுரம் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 107-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இதை முன்னிட்டு வடமதுரை பஸ் நிறுத்தம் அருகே உள்ள எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து,பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு,எல்லாபுரம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் எம்.மகேந்திரன் தலைமை தாங்கினார்.திருவள்ளூர் மாவட்ட 15-வது வார்டு அதிமுக மாவட்ட கவுன்சிலரும், ஒன்றிய கழக இணைச் செயலாளருமான எம்.அம்மினி மகேந்திரன் முன்னிலை வகித்தார். இதில்,சிறப்பு அழைப்பாளராக எல்லாபுரம் ஒன்றிய பெருந்தலைவர் வடமதுரை கே.ரமேஷ் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், ஒன்றியதுணைபெருந்தலைவர் வழக்கறிஞர் சுரேஷ்,பாசறை மாவட்ட தலைவர் ஜி.ராஜீவ் காந்தி,மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர் எம்.ராஜா,ஒன்றிய மாணவர் அணி இணைச் செயலாளர் கே.புஷ்பராஜ்,கிளைச் செயலாளர் சி.கே.சீனிவாசன், தமிழ்மன்னன்,சரவணன், முருகன்,நாகப்பன்,ஜெகதீஷ், கே.ராமதாஸ்,தனசேகர்,தயாநிதி,நந்தகுமார், செல்வம், ஜி.பிரண்ட்ஸ், என்.விஜி,டி.பிரசாத்,ஜி.அரவிந்த் உள்ளிட்ட மாவட்ட,ஒன்றிய, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகளும்,சார்புஅணி நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும், பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.