அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட எக்கோ கருவி! பொதுமக்கள் மகிழ்ச்சி..!

பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு தனியார் மருத்துவமனை சார்பில் எக்கோ கருவியை வழங்கப்பட்டது.

Update: 2023-10-27 01:30 GMT

பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரபல தனியார் இருதய மருத்துவமனை சார்பில் எக்கோ உபகரணம் வழங்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அரசு மருத்துவமனையில், நாள்தோறும் 500க்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இதயநோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான கருவிகள் இல்லாததால் சிரமம் ஏற்பட்டது.

எக்கோ பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை எக்கோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதற்கு பிறகு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளின் பேரில் பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணர் கே.எம்.செரியனின், பிரண்டயர் லைப்லைன் மருத்துவமனை சார்பில் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு, இதயநோய் பாதிப்புகளை கண்டறியும், ‘எகோ’ இயந்திரம் வழங்கப்பட்டது.


பொன்னேரி அரசு மருத்துவமனை வளாகத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியில், பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா முன்னிலையில் இதய அறுவை சிகிச்சை நிபுணர் கே.எம்.செரியன், ஆர்.எம்.கே.கல்வி குழுமத்தின் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் ஆகியோர் பங்கேற்று, ‘எகோ’ கருவியை மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கினர்.

முன்னதாக ‘எக்கோ’ கருவி வாயிலாக இதயநோய் பாதிப்புகளை கண்டறிந்து சிசிச்சை அளிக்க வசதியாக பொன்னேரி அரசு மருத்துவமனையின் மருத்துவ குழுவிற்கு பயிற்சியும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News