திருத்தணி அருகே ஜன்னல் கதவு செய்யும் கடையில் அதிகாலை தீ விபத்து
திருத்தணி அருகே ஜன்னல் கதவு செய்யும் கடையில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.;

திருத்தணி அருகே மரக்கடையில் தீ பிடித்து எரிந்தது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகரத்தில் சித்தூர் சாலையில் குரு மகேந்திரன் என்பவர் மரப்பொருட்கள், கதவு, ஜன்னல்கள் செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு இவர் தனது கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இன்று அதிகாலை இவரது கடை தீப்பற்றி எரிவதாக அறிந்து கடைக்கு வந்தார். அதற்குள் தீயணைப்பு படைவீரர்கள் இவரது கடையில் ஏற்பட்ட தீவிபத்து கட்டுக்குள் கொண்டுவர போராடி வந்தனர்.
தீயணைப்பு படை வீரர்கள் ஒரு மணிநேரம் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. இவரது கடையில் இருந்த 90 சதவீத பொருட்கள் மரப்பொருட்கள் தீயில் எரிந்து முற்றிலும் சாம்பலானது. மேலும் முக்கிய மரச்சாமான்கள் பொருட்கள் உற்பத்தி செய்யும் மிஷின் எரிந்து போனது. இந்த மரப்பொருட்கள் செய்யும் கடையில் இருந்த 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான எரிந்து போனது என்று மகேந்திரன் திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சம்பவம் குறித்து திருத்தணி போலீசார் இந்த தீ விபத்திற்கு மர்ம நபர்கள் காரணமா? அல்லது மின்சார உயர் அழுத்தம் காரணமா? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
..