ரயில் சுரங்க பாதையில் மழைநீர்! பொதுமக்கள் பயணிகள் அவதி
திருவள்ளூர் ரயில்வே சுரங்க பாதையில் மழை நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்களும், பயணிகளும் தண்டவாளத்தை கடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.;
சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் மழைநீர்
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் உள்ள சுரங்கப்பாதையில் இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள், ரயில் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
திருவள்ளுர் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மற்றும் முந்தின இரவு சூறாவளி காற்றுடன் கன மழை கொட்டி தீர்த்தது இதனால் திருவள்ளுர் ரயில் நிலையசுரங்கப்பாதையில் குளம் போல் மழைநீர் தேங்கி நின்றதால் ரயில் பயணிகள் முழங்கால் அளவில் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டது.
சிலர் தேங்கி நிற்கும் தண்ணீரில் கடந்து செல்வதை தவிர்த்து ஆபத்தான நிலையில் ரயில்வே தண்டவளத்தை கடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
சுரங்க பாதையில் தேங்கி நின்ற மழை நீரை ரயில்வே ஒப்பந்த ஊழியர்கள் அப்பகுதியில் ஏற்பட்டிருந்த அடைப்பு சரி செய்யும் பணியில் ஈடுப்பட்டனர்.
இதுகுறித்து பொதுமக்கள் பயணிகள் தெரிவிக்கையில் நிலையம் அருகே உள்ள குடியிருப்புகளில் உள்ள பொதுமக்களும் பயணிகளும் கடந்த காலத்தில் தண்டவாளத்தில் கடந்து சென்றதாகவும், இதனால் ரயில் தண்டவாளத்தை கடக்கும்போது சில நேரங்களில் விபத்துகளில் சிக்கி பலர் உயிரிழந்ததாகவும் கூறினர்
மேலும் அவர்கள் கூறுகையில், இதனை தவிர்க்க சுரங்க பாதை அமைத்து தந்தும் பயனில்லை. தொடர்ச்சியாக மழை காலங்களில் சுரங்க பாதையில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை இருந்து வருகிறது, இதன் காரணமாக பொதுமக்கள் தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர். எனவே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்காத வகையில் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும் மீண்டும் இது போல் நிலை உருவாகாத வண்ணம் அதிகாரிகள் நிறைந்த தீர்வு ஏற்பட்டு தர கோரிக்கை விடுத்துள்ளனர்.