வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக ரயில்வே ஊழியர் மீது மனைவி புகார்

திருவள்ளூர் ரயில்வே குடியிருப்பு பகுதியில், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக ரயில்வே ஊழியர் மீது மனைவி புகார் அளித்துள்ளார்.

Update: 2021-05-01 01:20 GMT

திருவள்ளூர் அடுத்த மணவாளநகர், கண்ணையா நகர் பகுதியை சேர்ந்தவர் சிந்துஜா (35). இவர் திருவள்ளூர் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் குமார் (34). இவரும், ரயில்வே ஊழியர்.
இருவரும்  ரயில்வே துறையில் பணியாற்றியதால் அடிக்கடி சந்திப்பு நடைபெற்று, அது காதலாக மாறி, காதலித்து வந்துள்ளனர். கடந்த 2019ல் வல்லக்கோட்டை முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு இருவரும், திருவள்ளூர் ரயில்வே குடியிருப்பில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், திருமணம் நடைபெற்ற நாளில் இருந்து, சிந்துஜாவிடம் ரூ. 35 லட்சத்தில் வீடு வாங்கித் தருமாறும், சம்பளப் பணத்தை மொத்தமாக தன்னிடம் கொடுக்குமாறும், கூடுதலாக வரதட்சணை கேட்டும் குமார் கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
அத்துடன், தனக்கு திருமணம் ஆனதை மறைத்து,  சென்னை வியாசர்பாடியை சேர்ந்த நிவேதா என்ற பெண்ணை, குமார்  2வது திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில், திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தன்னை திருமணம் செய்து கொண்டு வரதட்சணை கொடுமை செய்து வருவதாகவும், தனது திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும் கணவர் குமார், மாமியார் மன்னா, நாத்தனார் ரேகா, மற்றும் நண்பர் அன்பு ராஜ் ஆகியோர் மீது, சிந்துஜா புகார் அளித்துள்ளார்.

நேற்று திருவள்ளூர் மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News