‘தி.மு.க. ஆட்சி போதை பொருளுக்கு அடிமை’- முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா

தி.மு.க. ஆட்சி போதைபொருளுக்கு அடிமை என்று முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கூறினார்.

Update: 2024-01-26 11:30 GMT

முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா.

திருப்பூர் மாவட்டத்தில் செய்தியாளர் தாக்கப்பட்டதற்கு விடியா திமுக ஆட்சியின் அலட்சியமே காரணம் என திருவள்ளூரில் நடைபெற்ற மொழிப் போர்தியாகிகளுக்கான வீிரவணக்க நாள் பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா அளித்த பேட்டியில் கூறினார்.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி அருகே நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா தலைமை தாங்கினார். மாவட்ட அவை தலைவர் இன்பநாதன் ,மாணவர் அணி நிர்வாகிகள் சுதாகர், ஜெயசேகர்பாபு தங்கராஜ் ஆகியோர் வரவேற்றனர். நகர செயலாளர் கந்தசாமி, ஒன்றிய செயலாளர்கள் சூரகாபுரம் சுதாகர், ராமஞ்சேரி எஸ்.மாதவன், என்.சக்திவேல், சௌந்தர்ராஜன் இ.என்.கண்டிகை ரவி, டிடி சீனிவாசன் கோ.குமார், ஏ.ஜி.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தலைமைக் கழக பேச்சாளர் எம்.என்.முருகேசன் மற்றும் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.கோகுல இந்திரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இதில் கழக ஒன்றிய அவை தலைவர் சிற்றம் ஜெ சீனிவாசன்,  மாவட்ட இளைஞர் அமைப்பு இணைச்செயலாளர் எஸ் ஞானகுமார் ஆகியோரும் பேசினார்கள். முடிவில் பிவி பாலாஜி நன்றி கூறினார்.

இதில் பேசிய முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஒரு மொழிக்காக, ஒரு மொழி காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக உயிர் நீத்தார்கள் என்றால் அது தமிழ் மொழியை தவிர வேறுமொழி இல்லை என்றார், ஈனம், மானம் சூடு சொரணை இருந்தால் இந்தி திணிப்பை தமிழ்நாட்டில் கொண்டுவந்த காங்கிரசை விட்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தனித்து போட்டியிட தயாரா என பகிரங்கமாக கேள்வி எழுப்பினார். உதயநிதி ஸ்டாலின் நடத்திய மாநாடு ஒரு வெற்று மாநாடு. அங்கே பல்வேறு குளறுபடிகள் நடந்தது. அ.தி.மு.க. சார்பில் மதுரையில் நடத்திய மாநாடு , இந்திய அரசியல் வரலாற்றில் இது வரை யாருமே நடத்திடவில்லை என தெரிவித்தார். கடந்த இரண்டரை ஆண்டுகளில் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை , எந்த பணிகளும் செய்யவில்லை, ஒரு மக்கள் விரோத அரசாகவும், குடும்ப ஆட்சியாக இருந்ததே என குற்றம் சாட்டினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா ,தி.மு.க. ஆட்சியில் போதைப் பொருளுக்கு அடிமையாகிக் கிடக்கும் காட்சியைத் தான் காண முடிகிறது என்பதை நியூஸ் ஜெ தொலைக்காட்சியில் தெள்ளத் தெளிவாக காண்பித்தனர். செந்தில் பாலாஜியை இலாகலா இல்லாத மந்திரியாக ஏன் வைத்திருக்கிறார்கள் என்றால் முதல்வர் குடும்பத்திற்கு எவ்வளவு லஞ்சம் வாங்கியிருக்கிறார் என்ற உண்மையை சொல்லிவிடக்கூடாது என்பதற்குத்தான்.  தி.மு.க. மீது மக்கள் வெறுப்பில் இருப்பதால் அ.தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள் என்றார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, விடியா திமுக ஆட்சியின் அலட்சியத்தாலேயே செய்தியாளர் நேசப்பிரபு மீதான தாக்குதல் நடந்ததாக குற்றம் சாட்டினார். மேலும் தி.மு.க. இளைஞர் அணி மாநாட்டிற்கு கொள்கை அடிப்படையில் தொண்டர்களை வரவழைக்காமல் அரை குறை ஆடையுடன் ஆபாச நடனம் ஆடி வரவழைக்கும் அளவுக்கு தான் திமுக இருப்பதாக தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது தி.மு.க.வைச் சார்ந்த சிலர் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் நகர மன்ற உறுப்பினர்கள் சித்ரா விஸ்வநாதன், சுமித்ரா வெங்கடேசன், எல். செந்தில் குமார், அம்பிகா ராஜசேகர், ஆனந்தி சந்திரசேகர், கே விஜயகாந்த் வி ஆர் குமரேசன் ,வள்ளிமாப்பேட்டை சீனிவாசன் கடம்பத்தூர் ரமேஷ், கோபு ஆசிரியர் ,சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News