செங்குன்றத்தில் மாவட்ட அளவிலான சைலாத் சிலம்பம் போட்டி
செங்குன்றத்தில் மாவட்ட அளவிலான சைலாத் சிலம்பம் போட்டி நடைபெற்றது.;
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி செங்குன்றத்தில் தமிழ்நாடு சைலாத் சிலம்பம் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான சைலாத் சிலம்பம் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டிக்கு திருவள்ளூர் மாவட்ட சங்க செயலாளர் மாஸ்டர் மஸ்தான் தலைமையில் இரண்டு நாட்களாக நடந்து முடிவடைந்தது.
நிகழ்ச்சியில் முன்னதாக ஒருங்கிணைப்பாளர் ஜெம்சினா அனைவரையும் வரவேற்றனர். இப்போட்டியில் பல்வேறு பள்ளிகலிருந்து சுமார் 250-க்கும் மேற்பட்ட சைலாத் சிலம்ப மாணவ-மாணவிகள் சைலாத்தின் அடிமுறை, சுவடுவரிசை, நெடுகொம்பு, நடுகொம்பு, தொடுமுறை போன்ற பிரிவுகளில் கலந்துகொண்டு விளையாடினர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு சைலாத் சிலம்பம் சங்க பொது செயலாளர் ஆசான் குமரி எஸ்.கணேசன், உடற்கல்வி இயக்குனர் முனைவர் கோ.மீனாகணேசன் ஆகியோர் கலந்துகொண்டு சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி வாழ்த்தி பேசினார்.
இதில் மாணவர்களின் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.