திருக்கண்டலம் கிராமத்தில் தன்னார்வலர் ஆசிரியரின் கல்வி பணி, நேரில் சென்று பார்வையிட்டு பாராட்டிய மாவட்ட கலெக்டர்

திருக்கண்டலம் கிராமத்தில் தன்னார்வலர் பட்டதாரி ஆசிரியரின் கல்வி பணியை நேரில் சென்று பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பாராட்டினார்.;

Update: 2021-07-02 02:24 GMT

திருக்கண்டலம் கிராமத்தில் தன்னார்வலர் ஆசிரியரின் கல்வியைபணி, நேரில் சென்று பார்வையிட்டு பாராட்டிய மாவட்ட கலெக்டர்.

திருவள்ளூர் மாவட்டம் திருகண்டலத்தில் முதல் பட்டதாரியான ரோஜா அப்பகுதி ஏழை மாணவர்களுக்கு இலவச வகுப்புகள் மற்றும் டிஜிட்டல் வகுப்புகள் எடுத்து வருகின்றார்.

இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அக்கிராமத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆசிரியரின் பணியை பாராட்டினார். இதனையடுத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியருக்கு அக்கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் திருக்குறள் புத்தகத்தை வழங்கினர்.

Tags:    

Similar News