மே தினத்தன்று மதுபான கடைகள் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே தினத்தன்று மதுபான கடைகள் மூட திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்;

Update: 2023-04-26 10:15 GMT

 திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல் பி ஜான் வர்கீஸ் 

திருவள்ளூர் மாவட்டத்தில் வருகின்ற1 -ஆம் தேதி மே தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல் பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டார். 

நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள மே தினத்தை 1 ஆம் தேதி முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள திருத்தணி, திருவள்ளூர் பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூர், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை, ஆரம்பாக்கம் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மே 1 தேதி அன்று அரசு மதுபான கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல் பி ஜான் வர்கீஸ், அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது. திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபான சில்லறை விற்பனை கடைகள், பார்கள், பெரிய ஹோட்டல்களில் இயங்கும் பார்கள் மற்றும் மதுக்கூடங்கள் அனைத்தும் மே தினத்தன்று கட்டாயமாக மூட வேண்டும். இந்த உத்தரவு மீறி மது கடைகள் மற்றும் பார்கள் திறந்து கள்ள சந்தையில் விற்பனை செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப்படும்.


Tags:    

Similar News