கிருஷ்ணா நதிநீர் கால்வாயில் பழங்கால கற்சிலைகள் கண்டெடுப்பு

திருவள்ளூர் அருகே கிருஷ்ணா நதிநீர் கால்வாயில் மீட்கப்பட்ட சிலைகள் குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு செய்யவுள்ளனர்.

Update: 2022-03-11 02:30 GMT

கற்சிலைகளை மீட்ட வருவாய்துறையினர்.

திருவள்ளூர் அருகே காக்களூர் கிருஷ்ணா நதிநீர் கால்வாயில் பழங்கால அம்மன் கற்சிலைகள் கிடப்பதாக அப்பகுதி மக்கள் அளித்த தகவலையடுத்து திருவள்ளூர் வட்டாசியர் செந்தில்குமார் தலைமையில் வருவாய்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

கிருஷ்ணா கால்வாயை சோதனையிட்டபோது 2அடி உயர அம்மன் கற்சிலை, 2 அடி உயரம் கொண்ட சிமெண்ட் பழங்கால அம்மன் சிலை மற்றும் சிங்கம் கற்சிலை ஆகிய 3 பழங்கால சிலைகள் மீட்டு திருவள்ளூர் தாலுகா காவல்துறை உதவியுடன் திருவள்ளூர் தாலுகா அலுவலகம் பதிவு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

மேலும் இந்த சிலைகளின் பழமை தன்மையை அறிய சோதனைக்கு அனுப்பப்பட உள்ளதாக திருவள்ளுவர் வட்டாட்சியர் செந்தில்குமார் தெரிவித்தார்.

Tags:    

Similar News