முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி ஆலயத்தில் தீமிதி திருவிழா

பாடியநல்லூர் ஸ்ரீ முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி ஆலயத்தில் பங்குனி உத்திர தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்து சுவாமி தரிசனம்.;

Update: 2024-03-25 06:45 GMT

திருவிழாவில் தீமிதித்த பக்தர்கள்.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூர் கிராமம் பர்மா நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி ஆலயம் அமைந்துள்ளது.

இந்த ஆலயத்தில் 59-ம் ஆண்டு பங்குனி உத்திர தீமிதி திருவிழா மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம் தலைமையில் கணபதி ஹோமம், துர்கா ஹோமத்துடன் காப்புகட்டுதல் , கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக தொடங்கியது.

பின்னர் ஆலமரம் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்திலிருந்து சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் விரதம் இருந்து கங்கைநீர் மற்றும் பால்குடம் தங்கள் சிரசியில் சுமந்தப்படி பாடியநல்லூர் கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக ஆலயத்திடலை வந்தடைந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிப்பட்டனர்.

மேலும் ஒவ்வொருநாளும் நற்பணி மன்றங்கள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் உபயமாக இன்னிசை கச்சேரிகள், இலவச குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. இதணைத்தொடர்ந்து இறுதி நாளான 22-3-2024-ம் தேதி பூக்குழிக்கு சிறப்பு பூஜைகள் செய்து தீமிதி திருவிழாவை துவக்கி வைத்தனர்.

பின்னர் சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் உட்பட காப்புகட்டிய பக்தர்கள் அக்கினி குண்டத்தில் இறங்கி தங்களின் நேர்த்தி கடனை பூர்த்தி செய்தனர்.

இத்திருவிழாவை ஆலய அறங்காவலர் மீ.வே.கருணாகரன் மற்றும் இளங்கோவன், ஞானம், கருணாகரன், வீரம்மாள் ஆலய விழா குழு நிர்வாகிகள் தலைவர் புண்யசேகர், செயலாளர் சன்முனியாண்டி, பொருலாளர் ஞானப்பா உள்ளிட்ட கிராம பொதுமக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

முடிவில் மஞ்சள் நீராட்டு மற்றும் மலர்பூஜை நடைபெற்றது. முன்னதாக இத்திருவிழாவை முன்னிட்டு தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஸ்ரீ முனீஸ்வரர் 

Tags:    

Similar News