திருவள்ளூர் கிளை சிறையில் சென்னை சரக டி ஐ ஜி திடீர் ஆய்வு.
திருவள்ளூர் கிளை சிறையில் சென்னை சரக டி ஐ ஜி முருகேசன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள 18 காவல் நிலையங்களுக்கு உட்பட்டு இருக்கும் சிறைச்சாலை நகர் பகுதியில் அமைந்துள்ள திருவள்ளூர் கிளை சிறைச்சாலையை சிறைத்துறை துணைத் தலைவர் சென்னை சரகம் முருகேசன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்
இந்த ஆய்வின்போது சிறைச்சாலையில் உள்ள பதிவேடுகள் சரிபார்க்கப்பட்டது என்றும் தொடர்ந்து குற்றவாளிகள் சரியான முறையில் நடத்தப்படுகிறார்களா என்றும் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகளை உரிய நேரத்தில் வழங்கப்படுகிறதா என்றும் துப்புரவு பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்றும் சட்ட உதவி வழக்கறிஞர்கள் உரிய நேரத்தில் வந்து செல்கின்றார்களா என்றும் சிறைவாசிகள் காயங்களுடன் வந்தால் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு பதிவு செய்கிறார்களா என்றும் உணவுகள் சரியான நேரத்தில் அளிக்கப்படுகிறதா உணவுகள் சுத்தமாக உள்ளதா என்று இருக்கின்றதா என்றும் ஆய்வு மேற்கொண்டார் .
தொடர்ந்து சிறைவாசிகளிடம் சரக டிஐஜி சிறையில் ஏதாவது குறைகள் உள்ளதா என்று கேட்டார் அப்பொழுது சிறைவாசிகள் குறைகள் இல்லை என்று கூறினார்கள். சிறப்பாக பணிபுரிந்த முதல் நிலை காவலருக்கு இன்று வெகுமதி கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
அதை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட சிறை அமைக்கப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் அறிவித்ததை தொடர்ந்து கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட புதுமாவிளங்கையில் ரூபாய் 18 கோடியில் புதிய சிறைச்சாலை கட்டப்படும் என தெரிவித்தார் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று சென்னை சரக டிஐஜி முருகேசன் தெரிவித்தார் .
அப்பொழுது அவர்களுடன் திருவள்ளூர் கிளை சிறை கண்காணிப்பாளர் சுப்பிரமணியன், முதல் தலைமை காவலர் ஸ்டீபன் ,முதல் நிலை காவலர் சுந்தரமூர்த்தி ,இரண்டாம் நிலை காவலர் வெங்கடேசன், கணேசன், மற்றும் தினேஷ்குமார் துரைமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.