திருவள்ளூரில் மக்கள் நல பணியாளர் சங்கம் சார்பில ஆர்ப்பாட்டம்
6.அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூரில் மக்கள் நலப் பணியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நலப் பணியாளர்கள்.
தமிழ்நாடு மக்கள் பணியாளர்கள் சங்கம் சார்பில்6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளுர் அரசு மருத்துவக் கல்லூரி எதிரே நூற்றுக்கு மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 33 வருடங்களாக13500 குடும்பங்களான மக்கள் நல பணியாளர்கள் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் ஆளாகி வருவதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தேர்தல் அறிக்கையில் சொன்னபடி மக்கள் நல பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் தோழர் தயாளன் தலைமையிலும் மற்றும் மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தின் ஒன்றிய நிர்வாகிகள் மோகன், மகேந்திரன், சம்பத், ஏசுதாஸ், ராஜேஸ்வரி, ஹரிதாஸ், கருணாநிதி, கமல், சுகுமார், தாஸ், மோகன் ஆகியோர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சீனிவாசன், மாவட்ட பொறுப்பாளர் மோகனா ஆகியோர் கலந்துகொண்டு நிரந்தரத்துடன் கூடிய பணி நியமன ஆணை மற்றும் காலம் வரை ஊதியம் வழங்கிட வேண்டும்.
கடந்த 2011ஆம் மாதம் நவம்பர் மாதம் முதல் இறந்து போன மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் குடும்பங்களுக்கு தேர்தல் அறிக்கையில் சொன்னபடி ரூபாய் 5 லட்சம் நிவாரணம் தொகையாக வழங்கிட வேண்டும், வாரிசுகளுக்கு வேலை வழங்கிட வேண்டும், பணியிடம் மாறுதல் வழங்கிட வேண்டும், ஒன்றிய அலுவலகத்தில் ரூபாய் 5000 வழங்குவதை மாற்றி ஒன்றிய அலுவலகத்தில் வழியாக முழுமையான சம்பளம் வழங்கப்பட வேண்டும் எனவும், காலி பணியிடங்களில் முன்னுரிமை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி எதிரே நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில்த மிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் திவ்யா, மாவட்டச் செயலாளர் மில்கிராஜாசிங், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் மணிசேகர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.