மேற்கு வங்கத்தில் வன்முறையால் 10க்கும் மேற்பட்ட பாஜகவினர் உயிரிழந்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதையடுத்து மேற்கொண்ட வன்முறையால் 10க்கும் மேற்பட்ட பாஜகவினர் உயிரிழந்ததை கண்டித்து திருவள்ளூர் மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமையில் மீரா திரையரங்கம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2021-05-05 14:56 GMT

தமிழகம் முழுவதும் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற வன்முறை தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக பாஜக தலைவர் எல். முருகன் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து மேற்கு வங்கத்தில் இன்று முதல்வர் பதவியை ஏற்றுள்ள நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் மாவட்ட பாஜக சார்பில் மீரா திரையரங்கம் அருகில் மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமையில் திருவள்ளூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, பாஜகவினரை கொலை செய்ததற்கு நீதி வழங்கவேண்டும் என்றும் மேற்கு வங்கத்தில் கவர்னர் ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் பாஜகவினர் ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட பொது செயலாளர் கருணாகரன், நகரத் தலைவர் சதீஷ், மகளிரணியை சேர்ந்த சித்ராதேவி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News