கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலக வாயிலில் கிராம உதவியாளர் ஊழியர்கள் சங்கம் சார்பில் 14 அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது.
திருவள்ளூரில் தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளர் ஊழியர் சங்கத்தின் சார்பாக 14 அம்ச கோரிக்கைகளைவ லியுறுத்தி நிதி கேட்கும் போராட்டமானது வட்டார செயலாளர் வேணு, தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் சந்திரசேகர் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பி கண்டன உரையாற்றினார்.
இதில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் பணியில் இரவு, பகலும் என பாராமல் ஒரு கோடியே 6.லட்சம் மக்களுடைய சரியானபுள்ளி விவரங்களை சேகரித்து தமிழக அரசுக்கு கணக்கு ஒப்புவித்ததில் கிராம உதவியாளர்களுக்கு அதிக அளவில் பங்கு உள்ளதாகவும்,கிராம உதவியாயளர்கள் எவரேனும் இறந்துவிட்டால் அதன்பிறகு அந்த குடும்பம் வாழ வழிதெரியாமல் தவிக்குமே என்பதை புரிந்து கொண்டு கடந்த 1999ம்ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கருணை அடிப்படையில் வாரிசுக்கு வேலை வழங்கப்பட வேண்டும் என்று அரசு ஆணை வெளியிடப்பட்டது.
ஆனாலும் அந்த உத்தரவு கடந்த 08.03.2023 அன்று நிறுத்தப்பட்டதாகவும் அந்த அரசாணை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றும்.தமிழகம் முழுவதும் உள்ள மாற்றுதிறனாளிகளாக இருக்கும் கிராம உதவியாளர்கள் பெற்றுவந்த எரி பொருள் படி ரூ.2500/-கருணையே காட்டாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை மீண்டும் கொடுக்கப்பட வேண்டும் என்றும்,01.01.2003 க்கு பிறகு பணிக்கு வந்தவர்களுக்கு பழைய முறையிலான ஓய்வூதியம் வழங்க வேண்டும் எனவும் CPS திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கும், இறந்து போனவர்களுக்கும் அவர்களிடம் பிடித்தம் தொகையை வழங்க வேண்டும் எனவும் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நீதி கேட்கும் போராட்டம் நடைபெற்றது.
இதில் வட்டாரத் துணைத் தலைவர் சாமிநாதன்,வட்டார இணை செயலாளர் ரஜினி, வட்டார பிரச்சார செயலாளர் வினோத்குமார்,மகளிர் அமைப்பாளர் கிரேஸ், முன்னாள் மாவட்ட தலைவர் ரமேஷ் பாபு, ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.