திருவள்ளூர் அருகே சாலையை கடக்க முயன்ற புள்ளிமானுக்கு காலில் காயம்

திருவள்ளூர் அருகே சாலையை கடக்க முயன்ற புள்ளிமானுக்கு காலில் காயம் ஏற்பட்டதால் சிகிச்சை அளிக்கப்பட்டது.

Update: 2022-04-06 05:15 GMT

காலில் காயம் அடைந்த புள்ளிமானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி காட்டில் இருந்து வெளியே வந்த புள்ளிமான் ஒன்று திருப்பாச்சூர் அருகே சுற்றி கொண்டு இருந்தது. அந்த மான் சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை அருகே சாலையைக் கடக்க முயன்றபோது நெடுஞ்சாலை துறை சார்பில் சாலையோரத்தில் அமைத்திருந்த இரும்பு வேலியில் சிக்கிக்கொண்டது. இதில் அதன் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதனால் அந்த புள்ளிமான் வலியால் துடித்து நடக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தது. இதை கண்ட அப்பகுதி மக்கள் திருவள்ளூர் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் விரைந்து வந்து காயத்துடன் தவித்த புள்ளிமானை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர். தற்போது அந்த மானை திருவள்ளூரில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். கால்முறிவு சரியானதும் புள்ளிமான் மீண்டும் காட்டில் விடப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.


Tags:    

Similar News