திருவள்ளூர் மாவட்டம்: இன்று 1259 பேருக்கு கொரோனா, 27 பேர் பலி
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்று பாதிப்பு 1259, குணமடைந்தவர்கள் 1239, இறப்பு 27, சிகிச்சையில் 12,126;
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா 2வது அலை காரணமாக தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் உயிரிழப்பும் அதிக அளவு ஏற்பட்டு வருகிறது.
இன்று, 1259 நபர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால் மொத்த தொற்று பாதிப்பு 92,536 ஆக உயர்ந்தது.
இன்று ஒரே நாளில் 1239 நபர்கள் குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 79, 228 நபர்கள் குணமடைந்துள்ளனர்.
இன்று 27 நபர்கள் உயிரிழந்து மாவட்டத்தில் மொத்த உயிரிழப்பு 1182 ஆக உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் தலைமை அரசு மருத்துவமனை பொன்னேரி, ஆவடி, பூந்தமல்லி, திருத்தணி உள்ளிட்ட அரசு மருத்துவமனை மற்றும் சிறப்பு மையங்களில் 12,126 நபர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என சுகாதார துறையினர் தெரிவித்தனர்.