திருவள்ளூரில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஆலோசனை மையம்; ஆட்சியர் திறப்பு
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஆலோசனை மையத்தினை ஆட்சியர் திறந்து வைத்தார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆலோசனை மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ் திறந்து வைத்ததார். மாற்று திறனாளிகளிடம் இருந்து நேரடியாக விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டார்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் தொண்டு நிறுவனம் சார்பில் இந்த ஆலோசனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த திறப்பு விழாவில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வை. ஜெயக்குமார், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குனர் கே. மல்லிகா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ். பாபு, தொண்டு நிறுவனர் கார்த்திக் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.