ஆண்டார்குப்பம் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம்
திருவள்ளூர் மாவட்டம், ஆண்டார்குப்பம் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் இன்று நடைபெற்றது.;
திருவள்ளூர் மாவட்டம், ஆண்டார்குப்பம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று துவக்கி வைக்கப்பட்டது. ஆண்டார்குப்பம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் வட்டார மருத்துவ அலுவலர் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்த்தி ஹரிபாபு தலைமையில் தடுப்பூசி போடும் முகாம் இன்று நடைபெற்றது.
இதில் அப்பகுதியை சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அப்போது ஆண்டார்குப்பம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் நீலகண்டன், ஊராட்சி மன்ற செயலாளர், வார்டு உறுப்பினர் உள்ளிட்ட ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர்.