திருவள்ளூர்: ஒரே நாளில் 793 பேருக்கு கொரோனா; 7 பேர் பலி

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 793 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று என மாவட்ட நிர்வாகம் தகவல்.

Update: 2021-04-25 02:30 GMT

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனாவின் இரண்டாவது கட்ட அலையானது வெகுவாக பரவி வருவதால் கொரோனா தொற்று பற்றி நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 793 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உருவாக்கியுள்ளது. மேலும் 475 பேர் கொரோனாவிலிருந்து முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டத்தில் நேற்று 7 பேர் கொரோனாவிற்காக உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,790 ஆகவும் இதில் 49,474 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் .

மாவட்டத்தில் வீடுகளில் தனிமைப்படுத்துதல் மற்றும் மருத்துவமனை மூலம் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4562 ஆக உள்ளது. மேலும் கொரோனாவிற்காக மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 754 ஆக உள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

Tags:    

Similar News