கொரோனா 3ம் அலை தடுப்பு பணி: சாலையோர கடைகள் அகற்றம் - போலீசார் நடவடிக்கை
கொரோனா 3ம் அலையை தடுக்கும் விதமாக திருவள்ளூரில் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை காவல் துறையினர் அகற்றினர்.;
திருவள்ளூர் நகர காவல்நிலையம்.
கொரோனா 3ம் அலையை தடுக்கும் விதமாக திருவள்ளூர் நகரத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் விதமாக சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகள் அகற்றம் - நகர காவல் துறையினர் நடவடிக்கை.
கொரோனா 3ம் அலையை தடுக்க திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்நிலையில் திருவள்ளூர் நகரத்தில் உள்ள காமராஜர் சிலை, பேருந்து நிலையம், உழவர் சந்தை ஆகிய பகுதிகளில் சாலையோரக் கடைகளால் அதிகம் கூட்டம் கூடுவதாகவும் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் மேலும் இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறி இப்பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சாலையோர கடைகள் அப்புறப்படுத்தும் பணியில் திருவள்ளூர் நகர காவல் துறையினர் ஈடுபட்டனர்.
மேலும் அரசு உத்தரவை மீறி சாலையோர கடைகளில் கூட்டம் கூடினால் அவரது மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கூட்டம் கூடுவதை தவிர்க்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.