திருவள்ளூரில் ஒரே நாளில் 144 பேருக்கு கொரோனா, 7 பேர் உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பலன் இன்றி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.;

Update: 2021-06-25 16:30 GMT

பைல் படம்

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகின்றது.

ஒரே நாளில் 144 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 156 பேர் கொரோனாவில், இருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டத்தில் 7 பேர் கொரோனாவின் காரணமாக உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் வீடுகளின் தனிமைப்படுத்துதல் மற்றும் மருத்துவமனை மூலமாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 856 ஆக உள்ளது.

மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,10,374 ஆகவும், இதில் 1,07,830 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவிற்காக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1688 ஆக உள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

Tags:    

Similar News