மீஞ்சூர் அருகே கண்டெய்னர் லாரி ஓட்டுனர்கள் அடிப்படை வசதி கோரி போராட்டம்

மீஞ்சூர் அருகே அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி கண்டெய்னர் லாரி ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-10-02 10:23 GMT

மீஞ்சூர் அருகே சரக்கு பெட்டக முனையத்தில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை என கூறி லாரி ஓட்டுனர்கள் போராட்டம் நடத்தினார்கள். நீண்ட நேரம் காத்திருக்கும் நிலையில் முறையான அடிப்படை வசதிகள் இல்லை என குற்றம் சுமத்தி அவர்கள் இந்த போராட்டத்தை நடத்தினார்கள்.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த கொண்டகரை பகுதியில் தனியார் கண்டெய்னர் யார்டு இயங்கி வருகிறது. நாள்தோறும் 200.க்கும் மேற்பட்ட கண்டெய்னர்கள் மூலம் சரக்குகள் இறக்கி ஏற்றப்படுகிறது. இந்த கண்டெய்னர் யார்டிற்கு உள்ளே செல்ல ஒரு வழித் தடம் மட்டுமே இருப்பதால் நாள்தோறும் வரக்கூடிய கண்டெய்னர் லாரிகள் பல மணி நேரம் காத்துக்கிடக்கும் சூழல் ஏற்படுகிறது.

மேலும் கழிவறை,ஓய்வறை,குடிநீர் உள்ளிட்ட முறையான அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து லாரி ஓட்டுனர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கண்டெய்னர் யார்டில் முறையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனவும், பல மணி நேரம் காத்திருக்கும் ஓட்டுனர்களுக்கு வசதிகள் செய்து தர வேண்டும் என அவர்கள் கோஷம் எழுப்பினார்கள்.

ஒருவழிப்பாதை மட்டுமே இருப்பதால் சாலையோரங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழல் ஏற்படுவதாகவும், இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலும் ஏற்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர். கண்டெய்னர் யார்டிற்குள் செல்ல முறையான பாதைகளை ஏற்படுத்தி, ஓட்டுனர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் எனவும் ஓட்டுனர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

லாரி ஓட்டுனர்களின் இந்த திடீர் போராட்டத்தில் அந்த பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News