பட்டியலினத்தவரை அறநிலைய அமைச்சராக்க காங்கிரஸ் எஸ்சி பிரிவு தலைவர் விருப்பம்

பட்டியலினத்தவர் அறநிலைய துறை அமைச்சர் ஆக வேண்டும் என காங்கிரஸ் எஸ்.சி.பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் கூறினார்.

Update: 2024-08-25 10:15 GMT

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் எஸ்சி பிரிவு தலைவர் ரஞ்சன் குமார்.

தமிழகத்தில் பட்டியலினத்தவர் இந்து அறநிலையத்துறைக்கு அமைச்சராக வந்தால் தான் கோயில்களில் பட்டியலின மக்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியும் என தமிழ்நாடு காங்கிரஸ் மாநில எஸ்.சி. பிரிவின் தலைவர் ரஞ்சன் குமார் பெரியபாளையத்தில் அளித்த பேட்டியில் கூறினார்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் சுயம்புவாக எழுந்தருளியே பிரசித்தி பெற்ற பெரியபாளையம் பவானி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் எஸ்.சி. பிரிவின் தலைவர் எம்.பி ரஞ்சன்குமார், குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அந்த சந்திப்பின்போது உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வரப்போகிறார் என பேச்சு பேசப்படுகிறது என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து பேசுகையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டால் அவர் திறன் பட செயல்படுவார் இரண்டு தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வெற்றி கண்டவர்,அனுபவம் வாய்ந்தவர், இளைஞர்,அவர் துணை முதலமைச்சராவது வரவேற்க வேண்டியது.மேலும் தற்போது தமிழ்நாட்டில் பல கோயில்களில் பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்ய முடியவில்லையே என்ற கேள்விக்கு பட்டியலினத்தவரை இந்து அறநிலையத்துறைக்கு அமைச்சராக நியமிக்க வேண்டும், என்றும் சமீபத்தில் விழுப்புரம் அருகே பட்டியலினத்தவர் சாமி தரிசனம் செய்ததற்கு அந்த கோவிலே இடிக்கப்பட்டதாகவும் கண்டு வேதனை அடைந்தேன் என்றார்.

மேலும் தமிழ்நாட்டில் பட்டியலினத்தவர் முதலமைச்சராக வர சூழ்நிலைகள் இல்லை என விசிக தலைவர் தொல் திருமாவளவன் பேசி இருப்பது பற்றிய செய்தியாளர் கேள்விக்கு அது அவரது கட்சியின் நிலைப்பாடு என்றும், காங்கிரஸ் கட்சியில் பல மாநிலங்களில் பட்டியலினத் தலைவர்களே முதலமைச்சராக அமர்ந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மாநிலத் தலைவர் பட்டியலினத்தவர் என்றும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் தலைவர் செல்வப் பெருந்தகை முதலமைச்சர் ஆவார் என்றும் தெரிவித்தவர், நடிகர் விஜய் கட்சி தொடங்கியது பற்றிய கேள்விக்கு ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் மக்களுக்கு சேவை செய்யலாம் நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருப்பவர், அதிக சம்பளம் வாங்க கூடியவர், அவர் நடிப்பை நிறுத்திவிட்டு அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கதாகும், அரசியலில் போட்டிகள் இருந்தால்தான் அது நல்ல அரசியல் களமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

இதில் மாநில எஸ்.சி. பிரிவு பொதுச்செயலாளர் ஷீபா, மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். 

Tags:    

Similar News