நாடாளுமன்ற தேர்தலில் திருவள்ளூர் தனித் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி..!
திருவள்ளூர் தனி தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கைப்பற்றியது. மக்கள் தெளிவான சிந்தனை உள்ளவர்கள் என வெற்றிபெற்ற வேட்பாளர் சசிகாந்த் செந்தில் கூறினார்.;
திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி மக்கள் என்றும் முன்னேற்ற சிந்தனையில் உள்ளவர்கள்.இது இன்று, நேற்று அல்ல பல வருடங்களாக நிரூபித்துள்ளார்கள் என வாக்களித்த மக்களை நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் புகழ்ந்து பேசினார்.
இந்தியாவில் மதத்தால் பிரித்தாலும் சூழ்ச்சி எதுவும் இந்த தேர்தலில் பலிக்காமல் போயுள்ளது. தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகள் என்று கூறினார்கள்.அதை எல்லாம் இன்று நாங்கள் முறியடித்து உள்ளோம். விரைவில் ஆட்சியையம் அமைக்கும் நிலையம் வரும் என்றார்.
திருவள்ளூர் தனி தொகுதியை மீண்டும் கைப்பற்றியது. காங்கிரஸ். காங்கிரஸ் வேட்பாளர் 572155 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்தியா கூட்டணி தொண்டர்கள் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினார்கள்.
தமிழ்நாட்டின் நாடாளுமன்ற தொகுதிகளில் முதல் தொகுதியான திருவள்ளூர் நாடாளுமன்ற (தனி) தொகுதியாகும். இதில் திமுக, அதிமுக போன்ற முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களின்றி கூட்டணி கட்சியினர் மற்றும் புதுமுக வேட்பாளர்கள் உள்ளிட்ட 14 பேர் போட்டியிட்டனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி, பொன்னேரி,மாதவரம், பூந்தமல்லி, ஆவடி, திருவள்ளூர் ஆகிய 6 தொகுதிகளை உள்ளடக்கியது தான் இந்த திருவள்ளூர் தனி நாடாளுமன்ற தொகுதி ஆகும்.
இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில், அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ.வான கு.நல்லதம்பி, பா.ஜ.க சார்பில் பொன் வி.பாலகணபதி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெகதீஷ் சந்தர், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் டி.தமிழ்மதி உள்பட 14 பேர் போட்டியிட்டனர்.
இதனை அடுத்து நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மொத்தம் 34 சுற்றுகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் திமுக கூட்டணி காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சசிகாந்த் செந்தில் 796956 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி 223904, பாஜக வேட்பாளர் பொன் வி பாலகணபதி 224801 வாக்குகளும் பெற்றனர்.இதனை அடுத்து காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 572155 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் த.பிரபு சங்கர் அறிவித்தார்.
வெற்றி பெற்ற சசிகாந்த் செந்திலுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.உள்ளிட்ட காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமாக வரவேறறு பேண்ட் வாத்தியங்கள் முழங்க ஆடல் பாடலுடன் பட்டாசு வெடிக்கும் இனிப்பு வழங்கியும் வெற்றியை கொண்டாடினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் அவர்கள் கூறுகையில்.
இந்தியாவில் பல்வேறு பிரச்சினைகளுக்கு நடுவில் தலைமை தாங்கி. தமிழகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களும் இந்தியாவில் இளம் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் வேட்பாளர்கள் சிறப்பாக தற்பொழுது நடந்து முடிந்திருக்க கூடிய இந்த தேர்தல் சித்தாந்தங்களுக்கு இடையே யான தேர்தல். சவாலான தேர்தலாக இது நடந்து முடிந்தது.
தமிழ்நாட்டில் சில பேருக்கு ஐயப்பாடும் இருந்தது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நாற்பதும் நமதே நாடும் நமதே என்று கூறும் பொழுது பலபேர் கேலி கிண்டலாக சுட்டிக் காட்டினார்கள். இன்று இந்தியா முழுவதும் ஒரு சரித்திர வெற்றியாக அமைந்துள்ளது.
இதற்கு முழு காரணம் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இளம் தலைவர் ராகுல் அவர்களையே சேரும் எனவும். அவர்களின் கொள்கையை களத்தில் களப்பணியாளர்கள் திராவிட முன்னேற்றக் கழக தலைவர்கள் அடிப்படை தொண்டர்கள் காங்கிரஸ் பேரியக்கத்தின் தொண்டர்கள் விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சியின் தொண்டர்களும் வீடு வீடாகச் சென்று.நாக்கு சேகரித்து மகத்தான வெற்றியை தந்ததற்கு வெற்றியை அவர்களுக்கு தான் அர்ப்பணிக்க வேண்டும்.நான் இந்த தேர்தல் களப்பணியில் 20 நாட்கள் மட்டுமே பணியாற்றினேன். ஆனால் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு முழுமையான வெற்றியை கொடுத்ததற்கு. திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட கழக செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பொறுப்பாளர் எம்பி கிரிராஜன் ஆகிய வரும் என்னை ஐந்து அண்ணன்கள் போல இந்த தேர்தலை முடித்துக் கொடுத்து இருக்கிறார்கள்.
திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி மக்கள் என்றும் முன்னேற்ற சிந்தனையில் உள்ளவர்கள்.இது இன்று நேற்று அல்ல பல வருடங்களாக நிரூபித்து வருகிறார்கள். இன்று அவர்கள் இதையேதான் செய்திருக்கிறார்கள். இந்த வெற்றி முன்னேற்ற பாதையின் வளர்ச்சிக்கான சிந்தனையை காட்டுகிறது.
என்னதான் நீங்கள் வெவ்வேறு விதமான மக்களை பிரித்தாலும் சூழ்ச்சியை செய்தாலும்.திருவள்ளூர் மக்கள் என்றைக்கும் அடிபணிய மாட்டார்கள் என்பதற்கு இதுவே சான்று.
மதத்தால் பிரித்தாலும் சூழ்ச்சி எதுவும் இந்த தேர்தலில் பலிக்காமல் போய் உள்ளது. தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகள் என்னென்னவோ கூறினார்கள் அதையெல்லாம் இன்று முறியடித்துள்ளோம். ஆட்சியை கைப்பற்றுவதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தனக்கு வாக்களித்து மகத்தான வெற்றியை தேடி தந்த திருவள்ளூர் தொகுதி மக்களுக்கு என்றும் உறுதுணையாக இருந்து திருவள்ளூரை முதல் தொகுதியாக கொண்டு செல்ல உழைப்பேன் என்றார்.