திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியில் காங். வேட்பாளர் முன்னிலை..!
திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியில் 12 ஆவது சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 248244 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார்.;
இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் முதல் தேதி வரை நடந்தது. தமிழகத்தை பொறுத்தவரை முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடத்தி முடிக்கப்பட்டது. அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.
இந்தியா முழுவதும் 64 கோடி பேர் வாக்களித்ததாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜ்குமார் நேற்று அளித்த பேட்டியில் பெருமையாக கூறினார். இது உலக அளவில் மிகப்பெரிய சாதனை என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி வேட்பாளர்கள் தான் அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளனர். இரண்டாவது இடத்தை பிடிப்பதில் பாஜவிற்கும் அதிமுகவிற்கும் கடுமையான போட்டி நிலவுறது. தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிட்ட கோவை நாடாளுமன்ற தொகுதி மிக முக்கியமான தொகுதியாக எதிர்பார்க்கப்பட்டது. அவர் இந்த தொகுதியில் வெற்றி பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டார். அங்கு திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலையில் இருக்கிறார்.
திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியில் எண்ணப்பட்ட 12 வது சுற்று வாக்கு எண்ணிக்கை
காங்கிரஸ் வேட்பாளர்
திரு.சசிகாந்த் செந்தில்: 350135
தேமுதிக வேட்பாளர் : 101891
நல்லதம்பி
பாஜக வேட்பாளர்
பொன்.பாலகணபதி : 101501
நாம் தமிழர் கட்சி
ஜெகதீஷ் சுந்தர் : 49699
நோட்டா : 8085
திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த்iசெந்தில் அவர்கள். 12 சுற்றில் தேமுதிகவை விட 248244 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியில் எண்ணப்பட்ட 12 வது சுற்று வாக்கு எண்ணிக்கை
காங்கிரஸ் வேட்பாளர்
திரு.சசிகாந்த் செந்தில்: 350135
தேமுதிக வேட்பாளர் : 101891
நல்லதம்பி
பாஜக வேட்பாளர்
பொன்.பாலகணபதி : 101501
நாம் தமிழர் கட்சி
ஜெகதீஷ் சுந்தர் : 49699
நோட்டா : 8085
திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த்iசெந்தில் அவர்கள். 12 சுற்றில் தேமுதிகவை விட 248244 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.