திருவள்ளூர் தனி தொகுதியை மீண்டும் கைப்பற்றிய காங்கிரஸ்!

நடந்த முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், திருவள்ளூர் தனி தொகுதியை 572155 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்றது.;

Update: 2024-06-04 16:30 GMT

திருவள்ளூர் தனி தொகுதியை மீண்டும் கைப்பற்றியது காங்கிரஸ்.

திருவள்ளூர் தனி தொகுதியை மீண்டும் கைப்பற்றியது காங்கிரஸ் : 572155 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் காங்கிரஸ் தொண்டர்கள் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

தமிழ்நாட்டின் நாடாளுமன்ற தொகுதிகளில் முதல் தொகுதியாக இருப்பது திருவள்ளூர் நாடாளுமன்ற (தனி) தொகுதியாகும். இதில் திமுக, அதிமுக போன்ற முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களின்றி கூட்டணி கட்சியினர் மற்றும் புதுமுக வேட்பாளர்கள் உள்பட 14 பேர் போட்டியிட்டனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மாதவரம், பூந்தமல்லி, ஆவடி, திருவள்ளூர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது தான் திருவள்ளூர் தனி நாடாளுமன்ற தொகுதி ஆகும்.

இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில், அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ.வான கு.நல்லதம்பி, பா.ஜ.க சார்பில் பொன் வி.பாலகணபதி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெகதீஷ் சந்தர், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் டி.தமிழ்மதி உள்பட 14 பேர் போட்டியிட்டனர்.

இதனை அடுத்து இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 34 சுற்றுகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் திமுக கூட்டணி காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சசிகாந்த் செந்தில் 796956 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி 223904, பாஜக வேட்பாளர் பொன் வி பாலகணபதி 224801 வாக்குகளும் பெற்றனர்.

இதனை அடுத்து காங்கிரஸ் வேட்பாளர் சசிகாம் செந்தில் 572155 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் த.பிரபு சங்கர் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற சசிகாந்த் செந்திலுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இதனை அடுத்து வெற்றி வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமாக வரவேறறு பேண்ட் வாத்தியங்கள் முழங்க ஆடல் பாடலுடன் பட்டாசு வெடிக்கும் இனிப்பு வழங்கியும் வெற்றியை கொண்டாடினர்.

Similar News