திருமழிசை தொழில்பேட்டையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவள்ளூர் அடுத்த திருமழிசை தொழில்பேட்டை பகுதியில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் அனைத்து துறை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-07-19 05:15 GMT

திருமழிசை தொழிற்பேட்டையில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் 

திருமழிசை தொழிற்பேட்டையில் வரும் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காத அளவிற்கு நீர் வெளியேற்று கால்வாய்கள். நீர் வழித்தடங்கள் உடனடியாக சரி செய்யப்பட்டு தண்ணீர் தேங்காத அளவிற்கு நடவடிக்கைகள் உடனடியாக எடுக்க திருமழிசை தொழிற்பேட்டையில் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் தொழிற்சாலை உரிமையாளர்களுடன் ஆட்சியர் பிரபு சங்கர் ஆய்வு.

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை தொழில்பேட்டையில் சுமார் 300 மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது இந்நிலையில் கடந்த மிக்ஜாம் புயலின் போது 300க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளுக்குள் தண்ணீர் புகுந்து இயந்திரங்கள் பழுதாகி உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில் தொழிற்சாலை உரிமையாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள்

இதை அடுத்து தொழிற்சாலை உரிமையாளர்கள் சார்பில் தொழிற்பேட்டை வளாகத்திற்குள் தண்ணீர் தேங்காமல் இருக்க நீர் வெளியேற்று கால்வாய்களை தூர்வார வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. இந்நிலையில் வரும் வடகிழக்கு பருவ மழைக்காலங்கள் தொடங்குவதற்கு முன்பு தொழிற்பேட்டை வளாகத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் மற்றும் தொழிற்சாலை உரிமையாளர் உடன் தொழிற்பேட்டை வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டார்

இந்த ஆய்வில் தண்ணீர் தேங்கும் பகுதிகள் மற்றும் நீர் வழி கால்வாய்கள் மழைநீர் வெளியேற்று கால்வாய்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் பிரபு சங்கர் கூறுகையில்,  கடந்த முறை மழை காலங்களில் மழை நீர் புகுந்து பெரும் இன்னலுக்கு ஆளான நிலையில் வரும் வடகிழக்கு பருவ மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்காமல் வெளியேறுவதற்கான நீர்வழி. நீ வெளியேற்று கால்வாய்கள் ஆக்கிரமித்துக் வைக்கப்பட்டுள்ள வழித்தடங்களை பார்வையிட்டு அவற்றை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்தார்.

செம்பரம்பாக்கம் ஏரி பகுதியில் இருந்து திருமழிசை தொழிற்பேட்டை தாழ்வான பகுதி.  இதன் காரணமாக இப்பகுதியில் தண்ணீர் தேங்குவதாகவும் கடந்த முறை மழையின் போது தொழிற்சாலை உரிமையாளர்கள் செய்து வைத்த இன்சூரன்ஸ் உரிய முறையில் அவர்களுக்கு  சிறு குறு தொழில்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்பட்டது

கடந்த மிக்ஜாம் புயலின் போது 30 சென்டிமீட்டர் வரை மழை பெய்த நிலையில் அதே போன்று மழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ளும் அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொழிற்பேட்டையில் செய்யப்படும். வரும் மழைக்காலங்களில் பொருட்சேதம் அதிக அளவில் ஏற்படாமல் இருக்கவும் உயிர் சேதத்தை தவிர்க்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். செம்பரம்பாக்கம் ஏரி பகுதியிலிருந்து திருமழிசை தொழிற்பேட்டை 5 மீட்டர் தாழ்வான பகுதியில் அமைந்துள்ளதாள் தண்ணீர் தேங்காமல் நிற்க உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News