திருவாலங்காடு காவல் நிலைய வளாகத்தில் பெண்கள் மோதல்
திருவாலங்காடு காவல் நிலைய வளாகத்தில் போலீசார் முன்னிலையில் பெண்கள் மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.;
திருவாலங்காடு காவல் நிலைய வளாகத்தில் போலீசார் முன்னிலையில் பெண்கள் மோதல் இரு சமூகத்தினரிடையே தகராறால் பதற்றம் நிலவி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம் திருவாலங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட பாஞ்சாலி நகர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள திரவுபதி அம்மன் ஆலயம். இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம் தீமிதி திருவிழா நடப்பது வழக்கம். இவ்விழா கடந்த 17ம் தேதி துவங்கி 26ம் தேதி வரை 10 நாட்கள் நடைப்பெறும்.
இந்நிலையில் 8ம் நாளான நேற்று முன்தினம் இரவு நடுத்தெருவில் (முதலியார் வசிக்கும் பகுதி) திரவுபதி அம்மன் மாட்டு வண்டியில் ஊர்வலம் வந்தார்.
அப்போது அதே சமூகத்தை சேர்ந்த உதயகுமார்(18) மற்றும் லட்சுமணன்(19) இருவரும் ஊதுகுழல் கொண்டு மாட்டின் காதில் ஊதி உள்ளனர். இதனால் மாடு மிரண்டது.
இதனால் ஆத்திரமடைந்த சேகர் (40). மாற்று சமூகத்தை சேர்ந்தவர் (வன்னியர் சமூகம்) அடித்ததால் இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து இன்று இருதரப்பை சேர்ந்த பெண்கள் 150க்கும் மேற்பட்டோர் திருவாலங்காடு காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்தனர்.
அப்போது இருதரப்பு பெண்களிடையே காவல் நிலைய வளாகத்தில் காவலர்கள் கண்முன்னே காவல் நிலைய வளாகத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. வாய் சண்டையாக மாறியது இதனை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது போலீசார் இவர்களை கட்டுப்படுத்த திணறிப் போயினர்.
இதனை அடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு இரு சமூகத்தைச் சேர்ந்த பெண்களையும் ஆண்களையும் வழக்கு கொடுக்க வந்தவர்களையும் திருவலாங்காடு காவல் நிலைய காவலர்கள் சமரசம் செய்து அனுப்பினர்.
திருவாலங்காடு போலீசார் இருதரப்பை சேர்ந்த நால்வர் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை செய்யப்படுகிறது. இதனால் திருவாலங்காடு பகுதி பதற்றத்துடன் காணப்படுகிறது.