புழல் சிறையில் கேரம் விளையாடுவதில் கைதிகளுக்குள் மோதல்

புழல் சிறையில் கேரம் விளையாடுவதில் கைதிகள் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

Update: 2023-07-02 03:30 GMT

சென்னை புழல் மத்திய சிறையில் சுமார் 3000க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் விசாரணை பிரிவில் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் இருதரப்பினராக நேற்று கேரம் விளையாடியுள்ளனர்.

இந்த நிலையில், விளையாடிய இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் கைகலப்பாக மாறி தாக்கியதில் சிரில்ராஜ், சதீஷ் ஆகிய இருவர் காயமடைந்தனர். அப்போது அங்கிருந்த சிறைக்காவலர் சாம் ஆல்பர்ட் என்பவர் மோதலை தடுக்க சென்ற போது அவரை பணி செய்ய விடாமல் தடுத்து கீழே தள்ளிவிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக சிறை அதிகாரிகள் புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் கைதிகள் நாகராஜ், பாலா, ஜான், தீனா, வினோத் ஆகிய 5பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புழல் சிறையில் கேரம் விளையாடி கொண்டிருந்த இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News