ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வேயின் சென்னை கோட்ட புதிய மேலாளர் ஆய்வு

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வேயின் சென்னை கோட்ட புதிய மேலாளர் கணேசன் ஆய்வு.;

Update: 2021-08-25 13:55 GMT

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வேயின் சென்னை கோட்டத்தின் புதிய மேலாளர் கணேசன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை திருவள்ளூர், அரக்கோணம், புத்தூர், ரேணிகுண்டா ஆகிய ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள், மேம்பாட்டு பணிகள் உள்ளிட்ட குறித்து தென்னக ரயில்வேயில் சென்னை கோட்டத்தின் புதிய மேலாளர் கணேசன் ஆய்வு செய்து வருகிறார். இந்த ஆய்வின்போது திருவள்ளூர் ரயில் நிலைய மேலாளர் அறையை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், நடைமேடயில் உள்ள மேடு பள்ளங்களை சரி செய்யவும், ரயில் பயணச்சீட்டு வழங்கும் இடத்தில் சமூக இடைவெளி பின்பற்றி செல்ல அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து ரயில் நிலையத்தில் திருவள்ளூர் நகர நுகர்வோர் பாதுகாப்பு சங்கம், ரயில் பயணிகள் சங்கத்தின் நிர்வாகிகள், மணவாள நகர் குடியிருப்போர் நல சங்கம் உள்ளிட்ட சங்கங்கள், புறநகர் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் எனவும், ரயில்களை குறித்த நேரத்தில் இயங்க வேண்டும், அனைத்து விரைவு ரயில்களும் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை கொடுத்தனர்.

Tags:    

Similar News