செல்போன் டவர் அமைக்கும் விவகாரத்தில் முன்னாள் எம்எல்ஏ அமைதி பேச்சு வார்த்தை
Cellphone Tower Installation Talk குருவாயல் ஊராட்சிப் பகுதியில் அமைய உள்ள செல்போன் டவர் தொடர்பான விவகாரத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தில் முன்னாள் எம்எல்ஏ அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது.;
திருவள்ளூர் அருகே குடியிருப்பு பகுதியில் செல் போன் டவர் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வட்டாட்சியர், மற்றும் முன்னாள் எம்எல்ஏ ரவி ராஜ் தலைமையில் அமைதி பேச்சு நடைபெற்றது.
Cellphone Tower Installation Talk
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டத்துக்கு உட்பட்ட குருவாயல் கிராம பகுதிகளில் சுமார்500.க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் செல்போன் டவர் அமைக்கும் பணியானது கடந்த 2023 ஆண்டு தொடங்கியுள்ள நிலையில் அதற்கு அப்பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பணி கைவிடப்பட்டது.
Cellphone Tower Installation Talk
செல்போன் டவருக்கு எதிர்ப்பு தெரிவித்து பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள வந்த பெண்கள்
அதனை தொடர்ந்து அதே பகுதியில் மீண்டும் செல்போன் டவர் அமைக்கும் பணி தொடங்கியுள்ளதால்அதை எதிர்த்து வன்னியர் வாழ்வுரிமை சங்க தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான ரவிராஜ் தலைமையில் கடந்த வாரம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அதனை தொடர்ந்து திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் எம்எல்ஏ ரவி ராஜ் குடியிருப்பு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள டவர் புயல் மழை காலங்களில் விழுந்தால் சுற்றிலும் குடியிருப்பு பகுதிகளில் உயிர் சேதம் அதிக அளவில் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும்,
மேலும் செல் போன் டவரில் இருந்து வரும் கதிர்வீச்சு காரணமாக புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும்.ஆகையால் குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்காமல் அதே கிராமத்தில் காலியாக உள்ள பகுதியில் செல்போன் டவரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்அப்படி உரியநடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வன்னியர் வாழ்வுரிமை சங்கம் சார்பிலும் கிராம மக்கள் சார்பிலும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் வன்னியர் வாழ்வுரிமை சங்க மேற்கு மாவட்ட செயலாளர் புதுமாவிலங்கை தாஸ் மற்றும் சங்க நிர்வாகிகள் கிராம பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.