திருவள்ளூரில் லஞ்சம் வாங்கிய தொழில் மைய அலுவலக உதவியாளர் கைது

திருவள்ளூரில் மத்திய அரசின் கடன் வழங்கும் திட்டத்தில் மானிய தொகையை விடுவிக்க 2500 லஞ்சம் வாங்கிய தொழில் மைய அலுவலக உதவியாளரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2024-07-05 04:00 GMT

திருவள்ளூரில் லஞ்சம் வாங்கிய தொழில் மைய அலுவலக உதவியாளர் கைது

மத்திய அரசின் கடன் வழங்கும் திட்டத்தில் மானியத் தொகையை விடுவிக்க ரூ.2,500 லஞ்சம் வாங்கிய திருவள்ளூர் மாவட்ட தொழில் மைய அலுவலக உதவியாளர் கைது செய்யப்பட்டார்.

மத்திய அரசின் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும், மத்திய அரசால் வழங்கப்படும் மானியத் தொகையுடன் கூடிய கடன் உதவி வழங்கும் திட்டத்தில் மானியம் கொடுக்க ரூபாய் 2,500 லஞ்சம் பெற்ற திருவள்ளூர் மாவட்ட தொழில் மைய உதவியாளர் சிவகுமாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் சிறு குறு தொழில் முனைவோருக்கு மாவட்ட தொழில் மையம் மூலம் மத்திய மாநில அரசுகளின் பல்வேறு திட்டத்தில் தொழில் தொடங்க மானியத்துடன் வங்கி கடன் வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் திருவள்ளூர் ஈக்காடு பகுதியைச் சேர்ந்த குமாரசாமி( வயது 47). இவர் அப்பகுதியில் புத்தக கடை நடத்தி வருகிறார். இவர் புத்தக கடையை விரிவுபடுத்த கடந்த 2022 ஆம் ஆண்டு மாவட்ட தொழில் மையத்தை அணுகி ரூ.5 லட்சம் கேட்டு விண்ணப்பித்தார். ஆனால் ரூ.2லட்சத்தை மத்திய அரசின் மானியத் தொகையுடன் கடன் உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் பெற்றுள்ளார்.

இதனையடுத்து மத்திய அரசு திட்டத்தில் வழங்கப்படும் மானியம் ரூ.50 ஆயிரம் பெறுவதற்கு கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக மாவட்ட தொழில் மையத்தை அணுகியும் இதுவரை தொழில் மையத்தில் பணிபுரியும் அதிகாரிகள் வழங்காமல் அலைகழித்ததாக கூறப்படுகிறது.மேலும் மத்திய அரசின் மானிய பணம் வேண்டுமென்றால் லஞ்சம் கொடுக்க வேண்டும் எனவும் மாவட்ட தொழில் மைய உதவியாளர் சிவக்குமார் கேட்டுள்ளார்.

இதனால் மன உளைச்சல் அடைத்த குமாரசாமி திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் வழிகாட்டுதலின் பேரில் புகார்தாரர் குமாரசாமி மாவட்ட தொழில் மைய உதவியாளர் சிவக்குமாரிடம் ரசாயனம் தடவிய ரூ 2,500-ஐ கொடுத்த போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராமச்சந்திர மூர்த்தி, இன்ஸ்பெக்டர் தமிழ் அரசி தலைமையிலான 7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் உதவியாளர் சிவகுமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News