திருவள்ளூரில் 3 கோவில்களில் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு: கொள்ளையர்கள் அடுத்தடுத்து கைவரிசை, பரபரப்பு..!

Today News in Thiruvallur District - திருவள்ளூர் மாவட்டத்தில் , அடுத்தடுத்து 3 கோவில்களில் பூட்டை உடைத்து தங்கநகைகள், ரொக்கப் பணத்தை கொள்ளையர் திருடிச்சென்ற சம்பவம் பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Update: 2022-06-25 06:00 GMT

திருவள்ளூரில் கோவிலில் கொள்ளையர்களால் உடைக்கப்பட்ட உண்டியல்.

Today News in Thiruvallur District - திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், நெமிலி அகரம் கிராமம், கீழ்விளாகம் பகுதி ஸ்ரீகடும்பாடி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரி சேகர் பூஜை செய்து வருகிறார். இவர் வழக்கம்போல, கோவில் பூஜை முடிந்ததும் நேற்று முன்தினம் பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.க

இந்நிலையில் நேற்றுக்காலையில் கோயிலை பூசாரி சேகர் திறக்க வந்தபோது கோவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கோவிலுக்கு உள்ளே சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் இருந்த ஐந்தரை சவரன் நகை மற்றும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தியிருந்த காணிக்கை பணம் 2 லட்சம் ரூபாயை கொள்ளை போனது தெரியவந்தது.

அதேபோல அகரம் கிராமத்தில் செல்லாத்தம்மன் கோவிலின் பூட்டையும் உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த 10 சவரன் நகை மற்றும் உண்டியல் காணிக்கை பணம் 2 லட்சமும், அதே ஊருக்கு வெளியே உள்ள பாப்பாத்தியம்மன் கோவிலின் பூட்டையும் உடைத்து அம்மன் கழுத்தில் அணிந்திருந்த நகை மற்றும் உண்டியல் காணிக்கை பணம் 2. லட்சமும் திருடப்பட்டுள்ளது.

இந்த 3 கோவில்களுக்கும் சேகர் என்பவரே பூசாரியாக இருந்து நிர்வாகம் செய்து வருகிறார். இதுகுறித்து பூசாரி சேகர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைரேகை நிபுணர்களை கொண்டு தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, கடம்பத்தூர் ஒன்றியத்தில், ஒரே நாளில் அடுத்தடுத்து 3 கோவில்களில் நகை, பணம் கொள்ளை போன சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News